"டிரஸை கழட்டி.." நடுவானில் மேலாடையின்றி ஆட்டம்போட்ட பெண்! பக்கத்தில் குழந்தைகள் வேறு! பதறிய பெற்றோர்
மேலாடை இல்லாமல் ரகளையில் ஈடுபட்ட பெண் பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ: விமான பயணி ஒருவர் திடீரென குழந்தைகள் முன்னிலையில் ஆடைகளைக் களைந்து, மேலாடை இல்லாமல் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பயணங்கள் எப்போதுமே பலருக்கும் அழுத்தத்தைக் கொடுப்பதாக மாறலாம். சின்ன இடத்தில் அதிகப்படியானோர் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால் விமான பயணங்கள் பலருக்கும் அலர்ஜியாகவே இருக்கும்.
இதன் காரணமாகப் பல நேரங்களில் விமான பயணிகளில் வினோதமான மோதல் சம்பவங்கள் நடைபெறும்.. இந்தியாவில் கூட சமீப காலங்களில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஏர் இந்தியாவில் பெண் பயணி மீது ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

ரஷ்யா
இதனிடையே ரஷ்யாவில் அதைவிட மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர், தனது ஆடைகளைக் களைந்து மேலாடை இல்லாமல் நின்றுள்ளார். மேலும், நடுவானில் தான் புகை பிடிக்க வேண்டும் என்று ரகளை செய்ததால் விமானக் குழு வேறு வழியின்றி அவரை கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த நபர் நாம் அனைவரும் சாகப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே விமானி அறைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது,

நடுவானில் பறந்த விமானம்
ரஷ்ய நகரமான ஸ்டாவ்ரோபோலில் இருந்து மாஸ்கோவிற்கு சென்ற ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸின் விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அஞ்செலிகா மாஸ்க்விடினா என்ற 49 வயது பெண் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பொதுவாக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, அது turbulenceஇல் சிக்கும். காற்றின் இந்த கொந்தளிப்பில் விமானம் சிக்கும் போது, விமானத்தில் பலமான அதிர்வுகள் ஏற்படும்.

பெண் பயணி
இதுபோன்ற நேரங்களில், பயணிகள் காயம் ஏற்படலாம் என்பதால் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம்.. ஆனால், turbulence ஏற்பட்ட சமயத்தில் சீட் பெல்ட் சிக்னலையும் மதிக்காமல் இந்த பெண் எழுந்து சென்றுள்ளார். விமானங்களில் புகைபிடிக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் விதி இருக்கும் போதிலும், அதையும் தாண்டி புகை பிடிக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளார். அங்கிருந்த விமான குழுவினர் விமானத்தில் புகை பிடிக்கக் கூடாது என்றும் turbulence இருப்பதால் உடனடியாக சீட்டிற்குத் திரும்பும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலாடையைக் கழற்றி
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த பெண் திடீரென தனது மேலாடைகளைக் கழற்ற தொடங்கியுள்ளார். விமான குழு தடுக்க முயன்றும் பலனில்லை. அங்குக் குழந்தைகள் உட்பட பல பயணிகள் இருந்த நிலையில், அவர்களுக்கு முன்னிலையில் மேலாடை இல்லாமல் சுற்றியுள்ளார். மேலும், அனைவரும் சாகப்போகிறோம் என்றும் கூறியுள்ளார். அப்போது விமானத்தில் இருந்த ஒருவர், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா? இங்குக் குழந்தைகள் உள்ளனர். குறைந்தபட்சம் அவர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

ரகளை
இருப்பினும், அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும், அவர் விமானிகள் அறைக்குள்ளும் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பலர் தடுக்க முயன்றும் அந்த பெண் கேட்கவில்லையாம். அந்த பெண், "இதற்காக நான் ஒரு மனநல மருத்துவமனைக்கு அல்லது சிறைக்குச் செல்வேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.. ஆனாலும், நான் பைலட்களை பார்க்காமல் விட மாட்டேன். என்னை புகைபிடிக்கக் கூடாது என்று சொல்ல அவர்கள் யார்" என்று கத்தி கூச்சல் போட்டுள்ளார். விமான குழுவினர் அவரை பிடிக்க முயன்ற போது அவர்களையும் கடித்துள்ளார்.

கைது
பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அந்த பெண் பயணியைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த பெண் தொடர்ந்து நடந்து கொண்டார். இதையடுத்து அவரை கட்டுப்படுத்த முடிவு செய்தோம். விமானத்தில் அத்துமீறும் பயணிகளுக்கு ஏன் கடும் நடவடிக்கை தேவை என்பதை இந்தச் சம்பவம் விளக்குகிறது" என்றார். இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் அந்த பெண், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்,












Click it and Unblock the Notifications