For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பாலியல் சுகம்.." தள்ளாத வயதில் உலக போர் குண்டை பின்புறம் சொருகிய முதியவர்! அலறியடித்த டாக்டர்கள்

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 88 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரது மலக்குடலில் உலக போர் காலத்து குண்டு கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் இருந்த அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டன.

கடந்த நூற்றாண்டில் நடந்த மிக மோசமான போர்களாக முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் கருதப்படுகிறது. இதில் முதலாம் உலகப் போர் கடந்த 1914 முதல் 1918 வரை நான்கு ஆண்டுகள் போரிடப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

முதலாம் உலகப் போர் முடிந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், இன்னுமே கூட அதன் எச்சங்களை நம்மால் பார்க்க முடியும். அதேபோல அப்போது வீசப்பட்ட குண்டுகளில் சில இன்னுமே கூட வெடிக்காமலே உள்ளன.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு 'போஸ்ட்'.. ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு?ஷாக் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு 'போஸ்ட்'.. ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு?ஷாக்

முதியவர்

முதியவர்

அப்படி வெடிக்காமல் இருக்கும் குண்டுகளால் இப்போது சில நேரங்களில் பதற்றம் ஏற்படுவதும் அவ்வப்போது நடந்தே வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது. 88 வயதான பிரான்ஸ் முதியவர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்தார். தொடர்ச்சியாக வயிற்று வலி இருப்பதாக அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மேலும், உட்காரும் போதும் அவருக்கு அசவுகரியமாகவே இருந்துள்ளது. இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்ததும் மருத்துவர்களே ஷாக் ஆகிவிட்டனர்.

அலறிய மருத்துவர்கள்

அலறிய மருத்துவர்கள்

ஏனென்றால், அந்த 88 வயதான முதியவரின் மலக்குடலில் முதலாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்து மிரண்ட மருத்துவர்கள், எங்கு அந்த குண்டு வெடித்துவிடுவோ என்று அஞ்சி உடனடியாக போலீசாருக்கும் வெடிகுண்டு வல்லுநர்களையும் அழைத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவம் தெற்கு பிரான்ஸின் உள்ள டூலோன் என்ற பகுதியில் தான் நடந்துள்ளது.

மருத்துவமனை மூடல்

மருத்துவமனை மூடல்

மலக்குடலில் சிக்கிய குண்டை யாராவது அகற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த முதியவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை இந்த குழப்பம் ஏற்பட்டது. வெடிகுண்டு அகற்றும் வல்லுநர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவசர சிகிச்சை மூடப்பட்டு, அதுவும் அண்டை மருத்துவமனைகளுக்குத் திருப்பிவிடப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.

வெடிகுண்டு வல்லுநர்கள்

வெடிகுண்டு வல்லுநர்கள்

நிலைமையை உணர்ந்து அதற்கேற்ப அவசர திட்டம் ஒன்றும் தயார் செய்யப்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டது. முதலில் அந்த முதியவரை முழுமையாகப் பரிசோதித்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், இந்த முதல் உலகப் போரின் ஷெல் குண்டு மனிதனின் உடலுக்குள் வெடிக்க வாய்ப்பில்லை என்று தீர்மானித்தனர். இதன் பின்னரே மருத்துவர்கள் சற்று நிம்மதியடைந்தனர். அவர்கள் அந்த முதியவருக்குச் சிகிச்சை அளித்து, வெடிகுண்டை நீக்கும் முயற்சியில் இறங்கினர்.

ஆப்ரேஷன் மூலம் அகற்றம்

ஆப்ரேஷன் மூலம் அகற்றம்

அந்த நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்து, பின்புறத்தில் இருந்து அந்த குண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். அந்த குண்டு 20 செமீ நீளம் மற்றும் 2 அங்குல அகலம் கொண்டதாக இருந்தது. அந்த முதியவர் பாலியல் இன்பத்திற்காக அந்த குண்டை தனது பின்புறத்தில் செருகியுள்ளார். இருப்பினும், எதிர்பாராத விதமாக அது மலக்குழியில் மாட்டிக் கொள்ளவே, அவரால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த முதியவர் இப்போது நல்ல உடல்நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

திடீரென முதலாம் உலகப் போர்க் காலத்துக் குண்டுடன் மருத்துவமனை வந்த இந்த முதியவரால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதேநேரம் நோயாளியின் வயிற்றில் இருந்து உலகப் போர்க் காலத்துப் பொருட்களை மருத்துவர்கள் எடுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, பிரிட்டனின் க்ளூசெஸ்டர் பகுதியில் உள்ள ஒருவர் தடுக்கி விழுந்ததில், இரண்டாம் உலகப் போரின் பீரங்கிக் குண்டு அவரது மலக்குடலில் சிக்கியது. அதையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

English summary
88 year old French old man stuck world war shell in rectum: France world war shell inserted for pleasure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X