Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அசாகா" அலறிடுச்சு.. நள்ளிரவில் ஓட்டம் பிடித்த மக்கள்.. சைரன் இல்லைனா இஸ்ரேல் கதையே மாறியிருக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்த சைரன் அலறி இருக்கிறது. இந்த சைரன் எதற்கு இருக்கிறது.. இது எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த செப். மாதம் முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்துள்ளது.

What is Israel Sirens Azaka and how it is saving Israel people

இஸ்ரேல் மக்கள்: இந்தச் சூழலில் மீண்டும் நேற்றிரவு இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஹமாஸ் பெரிய ஏவுகணை தாக்குவதை நடத்தியுள்ளது. இருப்பினும், சரியான நேரத்தில் அங்குள்ள சைரன்கள் ஒலி எழுப்பி இஸ்ரேல் மக்களைக் காப்பாற்றி உள்ளது. இஸ்ரேலில் இருக்கும் இந்த சைரன்கள் என்ன.. அவை எப்படி மக்களைக் காப்பாற்றி வருகிறது என்பது குறித்து இதில் விரிவாகப் பார்க்கலாம்.

சுற்றி எதிரி நாடுகள் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் தன் மீது தாக்குதல் நடக்கும் என்பதை இஸ்ரேல் எதிர்பார்த்தே இருக்கும். இதன் காரணமாகவே திடீரென எதாவது ஏவுகணை தாக்குதல் நடந்தால் அதில் இருந்து இஸ்ரேல் மக்களைக் காப்பாற்ற ஒரு சைரன் அமைப்பை இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது. இது இஸ்ரேலின் விமானத் தாக்குதல் சைரன் அமைப்பின் ஒரு பகுதியாகும்.

எப்படி வேலை செய்யும்: இந்த சைரன்கள் நாடு முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. ராக்கெட் வருவதைக் கண்டறிந்தால் சில சைரன்கள் தானாகவே ஒலி எழுப்ப ஆரம்பித்துவிடும்.. சில சைரன்கள் இஸ்ரேல் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இஸ்ரேலை நோக்கி எதாவது ராக்கெட் ஏவப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக சைரன் அலறத் தொடங்கிவிடும்.

இந்த சைரன் சத்தத்தைக் கேட்ட உடன் என்ன செய்ய வேண்டும் என்பது இஸ்ரேலில் உள்ள சின்ன குழந்தைக்கும் தெரியும்.. ஏனென்றால் சிறு வயதில் இருந்தே இதற்கான பயிற்சியை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சைரன் சத்தம் கேட்ட உடன் இஸ்ரேல் நாட்டவர் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு உடனடியாக பாதுகாப்பு அறைகளுக்குச் சென்றுவிடுவார்கள்.

அசாகா: இஸ்ரேலியர்கள் இந்த சைரன்களை 'அசாகா' என்று அழைக்கிறார்கள். இதற்கு அலாரம் என்று அர்த்தம். இந்த சைரனை கேட்டதும் இஸ்ரேல் இளைஞர்கள் உடனடியாக மாமட் எனப்படும் பாதுகாப்பு ரூமிற்கு சென்றுவிட வேண்டும். இதற்கு அவர்களுக்கு ஒரு நிமிடம் அவகாசம் கிடைக்கும். இஸ்ரேலை நோக்கி வரும் ராக்கெட் இடைமறித்து அழிக்கப்பட்டால் சைரன் நின்றுவிடும். இருப்பினும், சைரன் நின்று சில நிமிடங்களுக்கு பிறகே இஸ்ரேல் மக்கள் வெளியே வருவார்கள். வெளியே வந்ததும் அவர்கள் தங்கள் வேலையை வழக்கம் போலச் செய்யலாம்.

திறந்தவெளி மைதானத்தில் இருக்கும் போது சைரன் அடித்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள கட்டிடத்திற்குச் சென்றுவிட வேண்டும்.. கட்டிடம் தொலை தூரத்தில் இருந்தால் அப்படியே தரையில் படுத்துக் கொண்டு கைகளால் தலையை மூடிக்கொள்ள வேண்டும். கார் ஓட்டி செல்லும் போது சைரன் சத்தம் கேட்டால் காரை நிறுத்திவிட்டு, அருகே உள்ள பாதுகாப்பு ரூமிற்கு செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநர் இந்த சைரன் ஒலியைக் கேட்டால் ரயில் வேகத்தைக் குறைக்க வேண்டும்..

என்ன செய்ய வேண்டும்: இப்போது இஸ்ரேல் நாட்டில் மல்டி டச் பாயிண்ட் சைரன் அமைப்பு இருக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் டிவி, ரேடியோ மற்றும் மொபைல் மூலம் சைரன் அலற ஆரம்பித்துவிடும். இஸ்ரேல் மக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் நாட்டில் இருக்கும் அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு ரூம் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இஸ்ரேல் நாட்டில் உள்ள சைரன்கள் தனித்துவமானவை இல்லை. உலகின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற சைரன்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது, எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதல்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற இந்த சைரன் முறை உருவாக்கப்பட்டன.

உருவாக்கியது யார்: இஸ்ரேலை பொறுத்தவரை இந்த எச்சரிக்கை அமைப்பை அங்கு உருவாக்கியதே ஆங்கிலேயர்கள்தான். அப்போது பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த இஸ்ரேல் பகுதியில் ஆங்கிலேயர்கள் அந்த எச்சரிக்கை சைரன் அமைப்பை உருவாக்கினார்கள்.. 1948க்குப் பிறகு, இஸ்ரேல் உருவாக்கப்பட்ட நிலையில், இந்த எச்சரிக்கை அமைப்பை இஸ்ரேல் விரிவுபடுத்தியது. மேலும், 2019இல் அந்த சைரன் அமைப்பு மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+