Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரூ.12 லட்சம் கோடி.." சிக்கலில் ரஷ்யா.. கையை பிசையும் புதின்.. அடடே இப்படி ஆகிடுச்சே.. என்ன தீர்வு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனக்குச் சொந்தமான $147 பில்லியன் அதாவது 12 லட்சம் கோடியை அணுக முடியாமல் திணறி வருகிறது. அந்த பெரிய தொகையை என்ன செய்யலாம் என்பதே வல்லுநர்கள் மத்தியில் இப்போது பெரிய குழப்பமாக உள்ளது.

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்ல ஒரு உறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவுடன் நீண்ட நாட்களாக நாம் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம்.

இதன் காரணமாகவே உக்ரைன் போர் விவகாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவை எதிர்த்த போதிலும், இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அதேபோல இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும் வழக்கம் போலத் தொடர்ந்தது.

 What is Russias Rupee Trap as $147 Billion of its money Stuck Abroad

ரஷ்யா: உலகின் பெரும்பாலான நாடுகள் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டன. மேலும், சுவிப்ட் எனப்படும் சர்வதேச நாணய பரிமாற்றத்தில் இருந்தும் ரஷ்யாவை விலக்கி வைத்துவிட்டது. இதனால் வர்த்தகம் செய்வதில் ரஷ்யாவுக்குச் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தது. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை வாங்கியது.

இருப்பினும், டாலரில் வர்த்தகம் செய்வதில் ரஷ்யாவுக்குச் சிரமம் இருந்தது. இதையடுத்து இந்திய ரூபாயிலேயே வர்த்தகம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு மாதமும் ரஷ்யாவுக்கு வெளியே 1 பில்லியன் டாலர் வெளியே தேங்குகிறதாம்.

ரூபாயில் வர்த்தகம்: அதாவது உக்ரைன் போருக்கு முன்பு வரை, ரஷ்யாவிடம் இருந்து பெறும் பொருட்களுக்கு இந்தியா டாலரில் பணம் கொடுக்கும். ஆனால், போருக்குப் பின் டாலரை ரஷ்யா பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரஷ்யா தரும் சரக்கிற்கு இந்தியா தனது ரூபாயிலேயே பணம் தரும். ஆனால், இந்தியாவிடம் இருந்து ரஷ்யாவுக்குத் தேவைப்படும் பொருட்கள் ஏற்றுமதி பெரியளவில் இல்லாத நிலையில், ரஷ்யாவின் பணம் தேக்கமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதில் தற்போது வரை எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில், ரஷ்யாவுக்கு வெளியே தேங்கும் ரூபாயின் மதிப்பு உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டும் 3 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 24 ஆயிரம் கோடி ரூபாய் பயன்படுத்த முடியாத வகையில் தேங்கிவிடுகிறதாம். கடந்த 2022இல் ரூபாயில் வர்த்தகம் செய்யத் தொடங்கியது முதல் இப்படி $147 பில்லியன் அதாவது 12 லட்சம் கோடி ரஷ்யாவுக்கு வெளியே தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரஷ்ய ஏற்றுமதி சங்கத்தினர் கூறுகையில், "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் விநியோகம் கணிசமாக உயர்ந்ததே இதற்குக் காரணம்.. எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவிடம் இருந்து ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யும் சரக்குகளின் மதிப்பு பெரியளவில் மாறவில்லை. இதுவே தேக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும்" என்றார். இரு தரப்பிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க வகையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவின் பிளான்: அதேநேரம் மறுபுறம் ரஷ்யா மட்டுமின்றி உலகின் வேறு பல நாடுகளையும் ரூபாயில் வர்த்தகம் செய்ய வைப்பதே இந்தியாவின் நோக்கமாகும். ஏற்றுமதி மூலம் ரூபாய் அதிகம் கிடைத்தால் அதை அரசு பத்திரங்கள் உட்பட உள்ளூர் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என ரிர்வ் வங்கி பரிந்துரைத்தது. அதேபோல இந்தியப் பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்யலாம் என்று இரு நாடுகளும் விவாதித்து வருகின்றன. இந்த ஐடியாவில் ரஷ்யா முதலில் ஆர்வமாக இல்லை.

இருப்பினும், இப்போது பல பில்லியன் டாலர் தங்கி வருவதால் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது குறித்தும் ரஷ்யா தீவிரமாக ஆலோசித்து வருவதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ரஷ்யாவைப் பொறுத்தவரை, சீனாவின் யுவான் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் போன்ற நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு இதில் ஆர்வம் இல்லை. இப்போது இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் ரஷ்யாவால் பெரியளவில் வலியுறுத்த முடிவதில்லை.

இது ரஷ்யாவின் தற்போதைய நிலையைத் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. ரஷ்யாவிடம் இருந்து பல நாடுகள் விலகி இருப்பதால் இப்போது உலக சந்தையில் முன்பு போல ரஷ்யாவால் ஆதிக்கம் செலுத்தி பேரம் பேச முடிவதில்லை. இதனால் சீனா, இந்தியா போன்ற நாடுகள் குறைந்து விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கிக் குவிக்கிறது. நிலைமை விரைவில் சரியாகவில்லை என்றால், ரஷ்யாவுக்கு வெளியே தேங்கியுள்ள பணம் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+