"புதுசு புதுசா கிளம்புதே.." சீனாவுக்கு வந்த மேஜர் பிரச்சனை.. அலர்ட் ஆகும் ஜி ஜின்பிங்! என்ன செய்வார்
பெய்ஜிங்: உலகின் டாப் பொருளாதாரங்களில் ஒன்றான சீனாவுக்கு இப்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைச் சிக்கலை ஜின்பிங் அரசு சமாளிக்கவில்லை என்றால் சீனாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான சீனா இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதாவது கடந்த 50, 60 ஆண்டுகளாகவே உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சீனா இருந்தது.

அந்நாடு குறுகிய காலத்தில் அடைந்த மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சிக்கும் இதுவே ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும், மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.
சீனா: ஒரு குழந்தை பாலிசியை மிகவும் கண்டிப்புடன் சீனா அமல்படுத்தியது. அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகளைப் பெற முடியாது.. அவ்வளவு ஏன் அரசு வேலையில் கூட சேர முடியாது என்ற திட்டங்களை அமல்படுத்தியது. மற்ற நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்கள் இருக்கிறது என்றாலும் கூட சீனா மிகவும் கண்டிப்புடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியது. இதனால் அதன் மக்கள்தொகை வேகமாகக் குறைந்தது.
மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா, இரண்டாவது இடத்திற்கும் சரிந்தது. இது நல்ல விஷயம் தான். ஆனால், சீனாவின் வருங்கால வளர்ச்சியை இதுவே பாதிக்கலாம். அதாவது மக்கள் தொகை குறைவது என்பது குழந்தைகள் பிறப்பு குறைவதே குறிக்கிறது. இதனால் வரும் காலத்தில் சீனாவில் இருக்கும் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும். அந்நாட்டு இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவது பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
புதிய பிரச்சினை: இதில் இருக்கும் பிரச்சினையைச் சீனா இப்போது தான் புரிந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள்தொகை அதிகரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இருப்பினும், அதில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகச் சீன இளைஞர்கள் திருமணத்தின் மீதே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களாம். குடும்ப வன்முறை அங்கே அதிகரிக்கும் நிலையில், திருமணத்தின் மீதான நம்பிக்கையை அந்நாட்டு இளைஞர்கள் இழந்துள்ளனராம்.
சீனாவின் கிழக்கு மாகாணமான ஷான்டாங்கில் 37 வயது இளைஞர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மனைவியைச் சாலையில் தள்ளிய அவர், காரை கொண்டு ஏற்றியுள்ளார். இடையில் காரை விட்டு சில சமயம் இறங்கிய அந்த நபர், தனது மனைவி உயிருடன் இருக்கிறாரா என செக் செய்துவிட்டு மீண்டும் மீண்டும் காரை வைத்து ஏற்றியுள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த கொடூர கொலை அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வன்முறைச் சம்பவங்கள்: கடந்த மாதம் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் இளைஞர் ஒருவர் தனது மனைவியையும் அவரது சகோதரியையும் கத்தியால் குத்திக் கொன்றார். அவர் பல ஆண்டுகளாகவே தனது மனைவியைக் கண்மூடித்தனமாகத் தாக்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேபோல செங்டு என்ற நகரில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விவாகரத்து பெற முயன்றுள்ளார். இதை அறிந்த கணவர் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார், இந்த தாக்குதலில் அந்த பெண் படுகாயமடைந்த நிலையில், சில வாரங்களில் ஐசியுவில் இருந்து சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
நடவடிக்கை தேவை: இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளைஞர்கள் குறிப்பாகப் பெண்கள் திருமணத்தை அதிகம் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். மக்கள்தொகை சரிவதால் என்ன செய்யலாம் எனக் குழப்பத்தில் இருக்கும் ஜி ஜின்பிங் அரசுக்குச் சீன மக்களின் இந்த மனநிலை சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது.
இந்த மனநிலை அதிகரிப்பதை உணர்ந்து அலர்ட் ஆகியுள்ள சீன அரசு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் மாற்றி மக்கள் தொகை அதிகரிப்பதை உறுதி செய்யச் சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் காலத்தில் அந்த நாடு பல சிக்கல்களை எதிர்கொள்ளவே நேரிடும்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications