அணுகுண்டு வீசினாலும் கூட "இந்த" ஒரு உயிரினத்திற்கு எதுவுமே ஆகாதாம்.. அது எப்படி! மிரண்ட ஆய்வாளர்கள்
டெல்லி: இப்போது அணு ஆயுதத் திறன் கொண்ட எந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டாலும் உலக நாடுகளே பதறும். ஏனென்றால் அணுகுண்டுகள் ஏற்படுத்தும் பேரழிவு அந்தளவுக்கு மோசமானது. அணு குண்டுகளில் இருந்து பொதுவாக எதுவுமே தப்ப முடியாது எனச் சொல்வார்கள். ஆனால் அணு குண்டுகளில் இருந்து ஒரே ஒரு உயிரினம் மட்டும் தப்ப முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடைசியாக இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தான் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டுகள் வீசப்பட்டன. அணு குண்டுகள் முதலில் பயன்படுத்தப்பட்டதும் அப்போது தான்.. கடைசியாகப் பயன்படுத்தப்பட்டதும் அப்போது தான்.

அணுகுண்டுகள்
இதனால் நகரம் முழுக்க மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. கட்டிடங்கள் சரிந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். போருக்குப் பிறகு அணு குண்டுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்த தகவல்கள் வெளிவந்தன. இது ஒட்டுமொத்த உலகிற்குமே அதிர்ச்சி தருவதாக இருந்தன. அதாவது அணுகுண்டு வெடித்தால் ரிலீஸான அதீத வெப்பம் மற்றும் அழுத்தம் சுற்றிப் பல கிமீ சுற்றளவில் இருந்த அனைத்தையும் அழித்தது.
மிக மோசமான பாதிப்பு
இது மட்டுமின்றி அதற்கு அப்பால் இருந்த உயிரினங்களும் கதிர்வீச்சால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. தீவிரக் கதிர்வீச்சுகளாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், அந்தப் பாதிப்பு தலைமுறை கடந்தும் தொடர்ந்தன. போர் முடிந்த பிறகு அங்கு நிலைமை என்ன என்பதைப் பார்க்கச் சென்ற ஆய்வாளர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது எல்லா உயிரினங்களும் அழிந்த போதிலும் கரப்பான் பூச்சிகள் மட்டும் உயிர் பிழைத்தன. இது ஆய்வாளர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், இது பல கேள்விகளையும் எழுப்பியது. இந்தளவுக்குக் கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் கரப்பான் பூச்சிகள் எப்படி உயிர் பிழைத்தன என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் ஆய்வையும் நடத்தினர். அப்போது தான் கரப்பான் பூச்சிகள் கதிர்வீச்சைத் தாங்கும் அசாதாரணத் திறனைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். இந்தத் தனித்துவமான பண்பு காரணமாகவே ஹிரோஷிமா நாகசாகி அணு குண்டுகளால் தாக்கப்பட்டு அனைத்து உயிர்களும் கொல்லப்பட்ட போதிலும் கரப்பான் பூச்சிகள் மட்டும் தப்பின.

கதிரியக்கம் எதுவும் செய்யாது
அதற்காகக் கரப்பான் பூச்சிக்கு 10 மீட்டர் தொலைவில் அணுகுண்டு வெடித்தாலும் எதுவும் ஆகாதா எனக் கேட்காதீர்கள்.. அணுகுண்டு வெடிக்கும் போது அதீத வெப்பம், எனர்ஜி மற்றும் கதிரியக்கம் வெளிப்படும். வெப்பம், எனர்ஜி பொதுவாக அனைத்து வெடிகுண்டுகளில் இருந்தும் வெளிவரும். கதிரியக்கம் மட்டுமே அணு குண்டுகளுக்கே உரித்தானது. அதீத வெப்பம் மற்றும் எனர்ஜியை எதிர்கொண்ட கரப்பான் பூச்சிகள் மட்டுமே கொல்லப்பட்டன. அதேநேரம் கதிரியக்கம் அதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
கரப்பான் பூச்சிகளால் அதிகபட்சம் 10,000 ரேடுகள் கதிர்வீச்சு யூனிட் வரை தாங்க முடியும் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மனிதர்களால் 800 ரேடுகள் கதிர்வீச்சை மட்டுமே தாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் நடந்த அணுகுண்டுகளில் இருந்து 10,300 ரேடுகள் கதிர்வீச்சு வெளியான நிலையில், அதை மனிதர்களால் சமாளிக்க முடியவில்லை. ஆனால், கரப்பான் பூச்சிகள் அதிலிருந்து தப்பிவிட்டன.
காரணம் என்ன
செல் பிரிவு விகிதங்களே இதற்குப் பிரதானக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. மனிதர்களில் செல்கள் வேகமாகப் பிரிகின்றன. இதனால் அவை எளிதாகக் கதிர்வீச்சு காரணமாகப் பாதிக்கப்படுகின்றன. மறுபுறம் கரப்பான் பூச்சிகளில் செல் பிரிவு விகிதம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் செல்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பிரிகின்றன. இதன் காரணமாகவே கதிர்வீச்சின் தாக்கம் கரப்பான் பூச்சிகளை எதுவும் செய்யவில்லை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications