Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் ரைசிங் லயன்.. ஈரானை ஈவு இரக்கமின்றி அடித்த இஸ்ரேல்.. 2 நாடுகளின் மோதலுக்கு என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் ராணுவத் தலைவர்கள் மட்டுமல்ல, ஈரானின் ராணுவ திட்டமிடல் மற்றும் பிராந்திய செல்வாக்கு முயற்சிகளில் முக்கிய நபர்களாக இருந்தவர்கள்.

israel palestine israel palestine war international

இஸ்ரேலின் நியாயம்

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரான் 70% யுரேனியம் செறிவூட்டல் அளவை எட்டியுள்ளது. இது அணு ஆயுதம் தயாரிக்கும் தரத்திற்கு மிக அருகில் உள்ளது (90%). மேலும், ஈரான் புதிய அணு அமைப்பை நிறுவி, தாக்குதலுக்கு ஒரு நாளுக்கு முன்பு மற்றொரு செறிவூட்டல் தளத்தை கட்டத் தொடங்கியதாக மொசாத் உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கூட சமீபத்தில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க தீவிரமாக திட்டமிடுவதாக கூறியது. எந்த விலை கொடுத்தும் ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை தடுக்க இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மூடிய அறையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், "நாம் இப்போது செயல்படவில்லை என்றால், செயல்பட வேறு தலைமுறை இல்லாமல் போகலாம்" என்று கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்தே இஸ்ரேல் ஈரான் மீது நேற்று தாக்குதல்களை நடத்தியது.

வரலாற்றுப் பின்னணி: ஈரானும் இஸ்ரேலும் ஏன் எதிரிகள்?

தற்போதைய நெருக்கடியைப் புரிந்துகொள்ள, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் சிக்கலான வரலாற்றைப் பார்ப்பது அவசியம். கடந்த ஐந்து தசாப்தங்களில் அவர்களின் உறவு மிக மோசமாக மாறி உள்ளது

1979 க்கு முன்பு, மேற்கத்திய ஆதரவு பெற்ற ஈரான் ஷாவின் கீழ் இஸ்ரேலுடன் நெருக்கமாகவே இருந்தது. ஈரானும் இஸ்ரேலும் வலுவான ராஜதந்திர மற்றும் உளவுத்துறை உறவுகளைப் பேணி வந்தன. இஸ்ரேலை அங்கீகரித்த சில முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஈரான் ஒன்றாகும், மேலும் இரு நாடுகளும் வர்த்தகம், எண்ணெய் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்தன.

இருப்பினும், 1979 இஸ்லாமியப் புரட்சி எல்லாவற்றையும் மாற்றியது. அயோடோலா கொமேனி தலைமையிலான புதிய இஸ்லாமிய அரசின் ஆட்சி, இஸ்ரேலை சட்டவிரோதமான "சியோனிச ஆட்சி" என்று கருதியது. மேலும் அமெரிக்காவை "பெரிய சாத்தான்" என்று அழைத்தது. அப்போதிருந்து, ஈரான் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இஸ்ரேலின் தீவிர எதிரிகளுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.முக்கியமாக் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பிதை ஈரான் விரும்பவில்லை.

பல தசாப்தங்களாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் மறைமுகப் படைகள் மூலம் தீவிர மோதலில் ஈடுபட்டுள்ளன. இரண்டு நாடுகளும் மறைமுகமாக பொய் செய்தே வந்துள்ளன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹவுத்திகளுக்கு ஈரான் நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்குகிறது. இந்த குழுக்கள் அனைத்தும் வெளிப்படையாக இஸ்ரேலை குறிவைத்துள்ளன. இதற்கு ஈரான் தீவிரமாக உதவி வருகிறது. ஹிஸ்புல்லா நடத்திய பல தாக்குதல்கள் ஈரான் நடத்தியது ஆகும்.

சிரியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள ஈரானிய சொத்துக்களின் மீது இஸ்ரேல் ரகசிய தாக்குதல்களையும் வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. ஸ்டக்ஸ்நெட் சைபர் தாக்குதல் (ஈரானின் அணு உலையை முடக்கியது) மற்றும் ஈரானிய அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள் போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இதில் அடங்கும்.

சமீபத்திய அட்டாக்

முக்கியமாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இடையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது.

இப்போது ஏன் தாக்குதல்?

ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின்படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.

ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.

இந்த அட்டாக் ஈரான் - இஸ்ரேல் இடையே மோதலை இன்னும் தீவிரமாக்கியது. இதற்கு கடந்த வருடமே ஈரான் பதிலடி கொடுத்தது. அதற்கு இஸ்ரேலும் திருப்பி தாக்கியது. இந்த வருடம் இப்போது மீண்டும் இஸ்ரேல் - ஈரான் மோதல் எழுந்துள்ளது. இத்தனை நாட்களாக தாக்காமல் இருந்தவர்கள் மீண்டும் தாங்கிக்கொள்ள தொடங்கி உள்ளனர். ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் சூழல் உள்ளதால் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+