நொடிக்கு நொடி எகிறும் பரபரப்பு.. "எல்லாம் ரெடியா.." இஸ்ரேல் பிரதமர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பகீர்
டெல் அவிவ்: இஸ்ரேல் போர் ஒரு வாரத்தைக் கடந்து தொடரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் வீரர்களிடம் கூறிய சில கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் நாட்டில் போர் தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது யாரும் எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தினர். முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ் படை, அடுத்து பாராசூட், ஜூப் மூலமாகவும் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதலை நடத்தினர்.

அங்குப் பல இஸ்ரேல் நாட்டினரை ஹமாஸ் படை சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. மேலும், இஸ்ரேல் நாட்டினர், வெளிநாட்டினர் எனப் பலரைப் பிணையக் கைதிகளாகவும் ஹமாஸ் படை பிடித்துச் சென்றது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு: இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இறங்கியது. காசா பகுதியில் இருக்கும் முக்கிய இடங்களை குறித்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் படையை முழுமையாக அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று ஏற்கனவே இஸ்ரேல் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் போரில் இரு தரப்பிலும் ஏற்கனவே 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லுமோ என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே காசாவுக்கு வெளியே இஸ்ரேல் அமைத்துள்ள ராணுவ தளத்திற்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென சென்றார். அங்குள்ள ராணுவ ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அவர், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடனும் உரையாடினார். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் சொன்ன அந்த வார்த்தை: அதில் அங்குள்ள இஸ்ரேல் வீரர்கள் மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடுகிறார். அப்போது அவர், "அடுத்த கட்டத்திற்கு ரெடியா.. அடுத்த கட்டம் சீக்கிரம் வந்துவிடும். எல்லாரும் தயாராக இருக்க வேண்டும்" என்கிறார். அதற்கு அவரை சுற்றி இருந்த இஸ்ரேல் வீரர்கள் ஆம் ரெடி என்பது போலத் தலையசைக்கிறார்கள். இருப்பினும், அடுத்து இஸ்ரேலின் திட்டம் என்ன என்பது குறித்து அவர் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்றே தெரிகிறது. இதன் காரணமாகவே வடக்கு காசா பகுதியில் இருக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டது. பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு முக்கிய வழிகளில் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும் அப்போது தாக்குதலை நடத்த மாட்டோம் என்றும் இஸ்ரேல் அறிவித்திருந்தது.

முக்கியம்: இந்தச் சூழலில் இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து வந்துள்ள இந்த மெசேஜ் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காசா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதலை நடத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே காசா எல்லைக்கு மிக அருகே இஸ்ரேல் புதிய ராணுவ தளங்களை அமைத்து. அப்படி அமைக்கப்பட்ட ஒரு ராணுவ தளத்திற்கு ரான் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று இதைக் கூறியிருந்தார். மேலும், இஸ்ரேல் அங்கே பீரங்கிகளையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் அடுத்த கட்டமாகக் காசா நகருக்கு இஸ்ரேல் படையெடுக்க வாய்ப்புகள் அதிகம். அப்படிப் படையெடுத்தால் உயிரிழப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும். காசாவில் இருந்து மக்கள் வெளியேறத் தொடங்கினாலும் கூட இன்னும் ஒரு பகுதி மக்கள், இதனால் போர் மேலும் பெரிதாக மாறும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications