பற்றி எரியும் வட கொரியா.. அசராமல் சிகரெட் உடன் சிரித்தபடி கூலாக போஸ் கொடுக்கும் அதிபர் கிம் ஜாங்
பியோங்யாங்: வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதன் தலைவர் கிம் ஜாங் உன் புதிய ஃபோட்டோ ஒன்று வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் உன் உள்ளார். உலகின் மற்ற நாடுகளுடன் வடகொரியாவுக்குப் பெரிய தொடர்புகள் இல்லை.
அதேபோல எப்போதும் தென் கொரியாவுடன் ஒரு மோதலான போக்கையே வட கொரியா கொண்டு வந்துள்ளது. அவ்வப்போது திடீர் திடீரென ஏவுகணை சோதனைகளையும் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தும்.

வடகொரியா
உலகின் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்று தென் கொரியா. குறிப்பாகத் தொழில்நுட்ப ரீதியாக தென்கொரியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேநேரம் அருகிலேயே உள்ள வடகொரியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்கு ஒரே காரணம் அங்கு நடைபெற்று வரும் கிம் ஜாங் உன் ஆட்சி தான். இது வடகொரியாவின் வளர்ச்சியை அப்படியே முடக்கிப் போட்டுவிட்டது. அங்குள்ளவர்களுக்கு வெளியுலகத்துடன் பெரியளவில் தொடர்பும் இருப்பதில்லை. அதேபோல தொடர்ச்சியாகத் தென் கொரியாவைச் சீண்டுவதையும் வடகொரியா வாடிக்கையாக வைத்துள்ளது.

ஃபோட்டோ
மேலும், தொடர்ச்சியாக புதிய புதிய ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தும். அந்நாட்டு மக்கள் உணவின்றி தவித்தாலும் கூட வடகொரியா அதன் ராணுவ ஏவுகணை சோதனைகளையா ஒருபோதும் நிறுத்தாது. இதற்கிடையே வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் புதிய ஏவுகணை சோதனையை மேற்பார்வையிடும்போது சிரித்தபடி நிற்கும் போட்டோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிகரட் உடன் கிம் ஜாங்
வட கொரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. static firing test என்ற வகையான இந்த ஏவுகணையை முதல் முறையிலேயே வெற்றிகரமாக வடகொரியா நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 'உயர் உந்துதல் திட எரிபொருள் மோட்டார்' தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக முடிந்த நிலையில், சிகரெட் பிடித்தபடி அதைச் சிரித்துக் கொண்டே ரசிக்கும் கிம் ஜாங் உன் படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

புதிய சோதனை
அதில் பின்னால், ஏவுகணை சோதனையில் இருந்து பெரியளவில் புகை கிளம்ப, முன்னால் சிரித்தபடி கையில் சிகரெட் உடன் போஸ் கொடுக்கிறார் கிம் ஜாங்.. இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மாற்றிய ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கிம் ஜாங் உன் பாராட்டினார்.. அடுத்த ஆயுதத்தையும் வல்லுநர்கள் மிக விரைவில் உருவாக்குவார்கள் எனத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா வரை செல்லும்
இந்த மேம்பட்ட ராணுவ ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது. அதிகபட்சம் இந்த ஏவுகணையால் அமெரிக்காவைக் கூட அடைய முடியுமாம். இதன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதிய ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியிலும் அந்நாட்டு ராணுவம் இறங்கியுள்ளது. சமீப காலங்களாகவே வட கொரியா போர்க்கப்பல்களில் எடுத்துச் செல்லக் கூடிய அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அதன் நீண்ட தூரத் திரவ ஏவுகணையான Hwasong-17 ICBMஐ தொடர்ந்து சோதனை செ்து வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மட்டும் வட கொரியா அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் கடலில் சுமார் 130 பீரங்கி குண்டுகளை வீசியதாகத் தென் கொரியா கூறியுள்ளது.

கிம் ஜாங் மகள்
இப்படி எல்லையில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே முதல் முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது மகளுடன் கடந்த நவ.19ஆம் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர்கள் ஏவுகணை சோதனையை ஒன்றாக இணைந்து ஆய்வு செய்தார்கள். அவரது மகள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி Hwasong-17 ஏவுகணை சோதனையின் போது விஞ்ஞானிகளுடன் இருந்தார். கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்தும் தகவல் பரவி வரும் நிலையில், அவரது மகள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பல விவாதங்களைக் கிளப்பியது.












Click it and Unblock the Notifications