"யாரும் தொந்தரவு செய்யக்கூடாது!" மோடி உடனான கார் மீட்டிங்கில் என்ன நடந்தது? புதின் சொன்ன மேஜர் தகவல்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சீனாவில் சந்தித்துப் பேசியிருந்தனர். அப்போது இரு தலைவர்களுமே காரிலேயே சுமார் 40 நிமிடங்கள் உரையாடினர். இதற்கிடையே இந்தச் சந்திப்பு தொடர்பாகவும் இரு தலைவர்களும் என்ன பேசிக் கொண்டனர். என்பது குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி சென்றிருந்தார். இந்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாகக் கடந்த ஆக்ஸட் 31ம் தேதி புதினும் மோடியும் இந்த மாநாட்டில் சந்தித்தனர். மறுநாள் திங்கட்கிழமை, இரு தலைவர்களும் லிமோசினில் ஒரு மணிநேரம் உரையாடினர்.

What really happened in Putin and Modi meeting During Hour Long Limousine Ride at SCO Summit

முக்கிய ஆலோசனை

புதின் அங்குச் செல்லும் முன்பு பிரதமர் மோடிக்காக 10 நிமிடங்கள் வரை காத்திருந்தார். பிறகு இருவரும் ஒன்றாகவே அங்கிருந்து கிளம்பினர். இரு தலைவர்களும் 15 நிமிடத்தில் மீட்டிங் நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டனர். இருப்பினும் இருவரும் மேலும் 45 நிமிடங்கள் காரிலேயே உரையாடினர். இந்த நீண்ட மீட்டிங்கில் என்ன ஆலோசனை நடந்தது என்பது குறித்துப் பல வியூகங்கள் எழுந்தன.

புதின் விளக்கம்

இதற்கிடையே இது தொடர்பாகவே ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய தகவல்களைக் கூறியிருக்கிறார். அதாவது டிரம்ப் உடனான தனது அலாஸ்கா உச்சி மாநாட்டுப் பேச்சுவார்த்தை குறித்தே பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கியதாக புதின் கூறியுள்ளார். இது தொடர்பாக புதின் மேலும் கூறுகையில், "இதில் ரகசியம் எல்லாம் எதுவுமில்லை.. அலாஸ்காவில் என்ன நடந்தது.. பேச்சுவார்த்தை எப்படிச் சென்றது.. என்ன பேசினோம் என்பதை மோடியிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக ரஷ்ய ஊடகமும் இது குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இரு தலைவர்களும் காரிலேயே உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் காரில் சுமார் ஒரு மணிநேரம் தனியாக உரையாடியதாகவும் முக்கியமான உரையாடல் என்பதால் யாரும் அதைக் குறுக்கிடவில்லை என்றும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் சந்திப்பு ஏன்?

புதின் பயன்படுத்தும் லிமோசின் காரில் தான் இந்தச் சந்திப்பு நடந்தது. அந்த காரில் எந்தவொரு ஒட்டுக்கேட்பு கருவியும் இல்லை என்பதாலேயே இரு தலைவர்களும் மிகவும் முக்கியமான இருதரப்பு விஷயங்களை காரில் விவாதித்துள்ளனர். இந்தியா ரஷ்யா இடையே கடந்த பல காலமாகவே நல்லுறவு இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகவே மாறிப் போனது.

அலாஸ்கா உச்சி மாநாடு

அலாஸ்கா உச்சி மாநாடு என்பது கடந்த மாதம் நடைபெற்றது. உக்ரைன் போர் தொடர்பாக இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பு மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மோதல் முடிவுக்கு வரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர் மாறாக மோதல் மேலும் தொடர்கிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக உக்ரைன் ரஷ்யா மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் டிரம்ப் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+