"30 நொடிகள்.." மொத்தமாக மாறிய கதை.. பாய்ந்து வந்த ஏவுகணை? வாக்னர் தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது
மாஸ்கோ: ரஷ்யாவின் தனியார் மிலிட்டரியான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் அரசின் ராணுவத்தைத் தாண்டி அங்குத் தனியார் மிலிட்டரியான வாக்னர் குழுவும் இருக்கிறது.. சட்டப்படி செய்ய முடியாதவற்றை இந்த வாக்னர் குழு மூலம் ரஷ்யா செய்வதாகக் கூறப்படுகிறது. இதன் தலைவராக இருந்தவர் எவ்ஜெனி ப்ரிகோஜின்.

இவரது தலைமையில் ரஷ்யா ராணுவம் திடீர் கலகத்தைக் கடந்த ஜூன் மாதம் மேற்கொண்டது.. வாக்னர் ராணுவம் தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறியது. இந்தக் கலகம் சில நாட்களில் கைவிடப்பட்டது என்ற போதிலும் இது ரஷ்ய அதிபர் புதினுக்கு சவால் விடுவதாகவே இருந்தது.
வாக்னர் குழு: இந்த கலகத்தைக் கைவிட்டதால் வாக்னர் குழுவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக புதின் அறிவித்த போதிலும், ப்ரிகோஜின் ரஷ்யாவுக்குத் திரும்பிய பிறகு அவர் எங்கும் வெளியே வரவில்லை.. அவர் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்தது தனது நியாயத்தை விளக்கியதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து ப்ரிகோஜினை அசிங்கப்படுத்தும் வகையில் அவரது அரை நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியானது. அப்போதே அமெரிக்கப் புலனாய்வு பிரிவு உள்ளிட்டவை ப்ரிகோஜின் கொலை செய்யப்படுவார் என கூறியது.
அதை உண்மையாக்கும் வகையில், இந்திய நேரப்படி நேற்றிரவு ப்ரிகோஜின் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டது. இதில் ப்ரிகோஜின் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்த மரணம் ஏற்கனவே மர்மமாக இருக்கும் நிலையில், இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் சென்ற எம்ப்ரேயர் லெகசி 600 எக்சிகியூட்டிவ் ஜெட் விமானத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையாம்..
எந்தவொரு பிரச்சினையும் இல்லை: அதாவது அவரது விமானம் விபத்தில் சிக்க 30 நொடிகளுக்கு முன்பு வரை அதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை விமான டேட்டா கூறுகிறது. இதில் ப்ரிகோஜின் உடன் சேர்த்து மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் ஏவியேஷன் ஏஜென்சியான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்ற போது ட்வெர் பிராந்தியத்தில் இந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
விமானம் கிளம்பியது முதல் நார்மலாகவே இருந்துள்ளது. விபத்து ஏற்பட 30 நொடிகள் வரையிலும் அதில் எந்தவொரு பிரச்சினையும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 9 மணியளவில் விமானம் திடீரென்று கீழ்நோக்கி செங்குத்தாக நிலத்தை நோக்கிப் பாய்ந்துள்ளது.. சுமார் 30 வினாடிகளில், அந்த விமானம் 28,000 அடி உயரத்தில் இருந்து 8,000 அடிக்கு மேல் சரிந்ததுள்ளது.
வல்லுநர்கள் சொல்வது என்ன: இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "எல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது.. விபத்து நடப்பதற்கு முன்பு வரை அதில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டது போல தெரியவில்லை" என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே விமான விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் விமானம் தலைக்குப்பற நிலத்தை நோக்கி வருவதும் அதன் பின்னால் புகை கிளம்புவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ரஷ்ய புலனாய்வாளர்கள் ஒரு கிரிமினல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.. ஏவுகணைகளால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. இருப்பினும், ரஷ்யா தரப்பில் இருந்து இந்த தாக்குதல் தகவலை யாரும் உறுதி செய்யவில்லை.
ஆன்லைன் விமான டிராக்கரான Flightradar24 இந்த விமானத்தின் இடத்தை விபத்து ஏற்பட்ட நேரத்திற்கு 8 நிமிடங்களுக்கு முன்பு வரை பதிவு செய்துள்ளது. இருப்பினும், அதன் பிறகு எதிர்பாராத சில குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் டேட்டாக்களை துல்லியமாகப் பதிவு செய்ய முடியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications