உங்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்போம்! இஸ்ரேல் மண்ணில் நின்றபடி முழங்கிய பிரிட்டன் பிரதமர்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் போர் தொடரும் நிலையில், அங்கே சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்த அவர், அதேநேரம் காசா மக்கள் குறித்தும் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இஸ்ரேல் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மோசமான தாக்குதலை நடத்தினர். கடந்த சில ஆண்டுகளில் நடந்ததிலேயே இது மோசமான தாக்குதலாக இருக்கிறது.

 What UK Prime minister Rishi Sunak said after meeting Israel PM Benjamin Netanyahu

இதையடுத்து இஸ்ரேலுக்கும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர்: இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். முதற்கட்டமாக இன்று அவர் இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ளவும் தங்களைத் தாக்கிய ஹமாஸ் படைக்குப் பதிலடி கொடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்த ரிஷி சுனக், இஸ்ரேலுக்கு தான் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க உலக தலைவர்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே இஸ்ரேலுடன் தாங்கள் இருப்பதைக் காட்ட அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் நாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தார். இந்தச் சூழலில் தான் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த ரிஷி சுனக் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரிஷி சுனக்: இந்தச் சந்திப்பை நெதன்யாகு உடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், "ஹமாஸ் படை போல இல்லாமல் அப்பாவி பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் இஸ்ரேல் தெளிவாக உள்ளது எனக்குத் தெரியும்..

மேலும், போர் நடக்கும் நிலையில், இங்கிருந்து பிரிட்டன் மக்களை வெளியேற்ற இஸ்ரேல் உதவி இருக்கிறது. அதற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேல் மட்டுமின்றி பாலஸ்தீனியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் ஒத்துக் கொள்கிறோம். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றி" என்றார்.

பிணையக் கைதிகள்: ஹமாஸ் படையைக் குறித்து வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா அனுப்பிய உதவி பொருட்கள் இஸ்ரேல் மற்றும் எகிப்தில் இருக்கிறது. இந்த உதவி பொருட்கள் காசா மக்களுக்கு மிகப் பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹமாஸ் படை பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றோரை விடுவிக்கும் வரை உதவி பொருட்கள் தங்கள் நாட்டின் வழியே செல்வதை அனுமதிக்க மாட்டோம் என அறிவித்திருந்தது.

இருப்பினும், அமெரிக்க தொடங்கிப் பல உலக நாடுகளும் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் தான் மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது. மேலும், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் படை பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ள நிலையில், அவர்களை விடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரிஷி சுனக் தெரிவித்தார்.

காசா தாக்குதல்: மேலும், காசா மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். காசா மருத்துவமனை தாக்குதல் குறத்து இஸ்ரேலும் ஹமாஸ் படையும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+