பெரும் உலக போர், செவ்வாய்க் கிரகம், உள்நாட்டு கலகம்... 2023இல் என்ன நடக்கும்.. நோஸ்ராடாமஸ் பகீர்
இத்தாலி: பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஜோதிடர் நோஸ்ராடாமஸ் அடுத்தாண்டு உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து சில பகீர் கருத்துக்கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோதிடர் நோஸ்ராடாமஸ். இவர் 16ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து மறைந்திருந்தாலும் கூட, வரும் காலம் தொடர்பாக அவர் பல்வேறு கணிப்புகளை விட்டுச் சென்றிருந்தார்.
இவரது பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. அதுவும் ஏதோ சிறு கணிப்புகள் இல்லை.. உலகப் போர் தொடங்கி ராணி எலிசபெத் மறைவு வரை இவரது பல கணிப்புகள் அப்படியே நடந்து இருக்கிறது.

துல்லியமான கணிப்பு
ஹிட்லரின் எழுச்சி, இரண்டாம் உலகப் போர், இரட்டை கோபுர தாக்குதல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை, பிரெஞ்சு புரட்சி போன்ற முக்கிய நிகழ்வுகளை இந்த நோஸ்ட்ராடாமஸ் துல்லியமாகக் கணித்துள்ளார். டிசம்பர் 1503ஆம் ஆண்டு பிறந்த இவர், மொத்தம் 6338 கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். உலகம் எப்படி, எப்போது அழியும் என்றும் கூட அவர் கணித்து உள்ளார். இதையெல்லாம் விட கொரோனா பெருந்தொற்று தொடர்பாகக் கூட அவர் துல்லியமான கணிப்பைச் செய்துள்ளார்.

பெரும் போர்
அவரது கணிப்புகளில் சுமார் 70% அப்படியே நடப்பதாக வல்லுநர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இதற்கிடையே அவர் 2023 குறித்தும் சில பகீர் கணிப்புகளைச் செய்துள்ளார். அதில் முக்கியமானது பெரும் போர். அடுத்தாண்டு உலகில் பெரும் போர் ஏற்படும் என்று கணித்துள்ளார். இந்த போர் 7 மாதங்கள் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் ரஷ்யா உக்ரைன் போரையே குறிப்பிடுகிறார் என்றும் இது மோசமானதாக மாறி 3ஆம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

செவ்வாய்க் கிரகம்
இந்த பெரும் போரில் பிரான்ஸ் உள்ளே நுழையாது என்றும் அவர் கணித்து உள்ளார். அடுத்து செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் தரையிறங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், நமக்கு இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு இதற்குச் சாத்தியமில்லை. 2029இல் தான் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் மனிதர்களைச் செவ்வாய்க் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என எலான் மஸ்க் கூறியிருந்தார். இன்னும் சிலர் செவ்வாய்க் கிரகத்தில் ஏற்படப் போகும் மாற்றத்தையே நோஸ்ராடாமஸ் குறிப்பிட்டு உள்ளதாகக் கூறுகிறார்கள்.

போப் பிரான்சிஸ்
அடுத்த போப் ஆண்டவர் குறித்தும் கூட நோஸ்ராடாமஸ் கணித்து உள்ளார். 2023இல் பிரான்சிஸுக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படுவார் என அவர் குறிப்பிட்டு உள்ளார். இருப்பினும், போப் பிரான்சிஸ் தான் கடைசி நேர்மையான போப் ஆக இருப்பார் என்றும் இதற்கு பின் போப் பதவிக்கு வருபவர்கள் நிச்சயம் பல முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கணித்து உள்ளார். மேலும், புவி வெப்ப மயமாதல் பாதிப்பு தொடரும் என்றும் அடுத்தாண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

புதிய உலக கூட்டணி
அடுத்தாண்டு சர்வதேச அளவில் பல மாற்றங்கள் நடக்கும் என்பதை அவர் கணித்துள்ளார். குறிப்பாக இரு வலிமையான நாடுகள் இணைந்து ஒரு மிகப் பெரிய கூட்டணியை உருவாக்குமாம். வலிமையான ஒரு தலைவரும் வலிமையற்ற ஒரு தலைவரும் இணைந்து இந்த கூட்டணியை உருவாக்குவார்கள். இருப்பினும், இந்தக் கூட்டணி நீண்ட காலத்திற்குத் தாங்காது என்பதையும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.

கலகம்
மேலும், பல நாடுகளில் அடுத்தாண்டு அமைதியற்ற சூழல் நிலவும் என்றும் உள்நாட்டு மோதல் இருக்கும். ஏற்கனவே பொருளாதார சிக்கல் மோசமாகி உள்ளது. இதனால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. இதனால் அடுத்தாண்டு செல்வந்தர்களுக்கு எதிராக மிகப் பெரிய கலகம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். இவை அனைத்தும் நடக்குமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications