காபூலை விட்டு ஏராளமான பணத்துடன் தப்பியோடிய அஷ்ரப் கனி.. செட்டில் ஆன இடம்.. இதுதான்
காபூல்: ஏராளமான பணத்துடன் காபூலை விட்டு ஹெலிகாப்டரில் தப்பியோடி முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அபுதாபியில் செட்டில் ஆகியிருப்பதாக காபூல் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காபூலை விட்டு வெளியேறிய பிறகு அண்டை நாடான தஜிகிஸ்தான் அல்லது உஸ்பெகிஸ்தானுக்குச் சென்றிருக்க முடியும் என்று அந்நாட்டு ஊடக வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்தன.
ஆனால் ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் காபூலை கைப்பற்றியதில் இருநது அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியாமல் இருந்தது.

அஷ்ரப் கனி எங்கே
காபூலில் அரசபடைகள் தலிபான்களிடம் சரணடைந்த பின்னர், அதிபர் அஷ்ரப் கானி தனது உதவியாளர்களுடன் ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றார். காபூல் நியூஸின் சமீபத்திய அறிக்கையின்படி, காபூலில் இருந்து ஏராளமான பணம் நிரப்பு சூட்கேஸ்களுடன் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் குடியேறியதாக கூறியுள்ளது.

ஹெலிகாப்டரில் தப்பினார்
காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி காபூலில் இருந்து நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பிச் சென்றதாக அறிவித்தது. ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர் நிகிதா இஷ்சென்கோ கூறுகையில், "ஆட்சி முடிவுக்கு வந்த உடன் . ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கனி நான்கு கார்களில் பணததை பணத்தை நிரப்பி உள்ளார். அத்துடன் அதற்கு மேல் இருந்த பணத்தை ஹெலிகாப்டரில் வைத்து நிரப்பி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை திணிக்க முடியாததால் அதை அப்படியே விட்டுவிட்டார். ஏராளமான பணம் தார்ச்சாலையில் சிதறி கிடந்தது" என்றார்.

ஏமாற்றிவிட்டார்
இதனிடையே அஷ்ரப் கனி காபூலில் இருந்து தப்பிச் சென்ற பிறகு,அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா முகமதி ஒரு ட்வீட்டில் "எங்கள் கைகளை எங்கள் முதுகுக்குப் பின்னால் கட்டிவிட்டு, எங்கள் தாய்நாட்டை விற்றுவிட்டார் அஷ்ரப் கனி. அவரை நம்பி இருந்த மக்களை ஏமாற்றிவிட்டு தான் மட்டும் தப்பிவிட்டார்" என்று கூறினார்.

ரத்த வெள்ளம்
இந்நிலையில் காபூலில் இருந்து தப்பிய அஷ்ரப் கனி அபுதாபியில் குடியேறியுள்ளார். காபூல் நியூஸ் நிறுவனம் தொடர் ட்வீட்களின் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. முன்னதாக நாட்டை விட்டு தப்பிய அஷ்ரப் கனி "தலிபான்கள் ஒரு கட்டத்தில் நெருஙகினார்கள். அவர்கள் காபூல் நகரையும், காபூல் மக்கள் அனைவரையும் தாக்க வந்திருக்கிறார்கள். ரத்த வெள்ளத்தை தவிர்க்கும் பொருட்டு, வெளியே செல்வதே சிறந்தது என்று நினைத்தேன், " என்று அவர் கூறினார்.

கைது செய்ய கோரிக்கை
இதனிடையே ஆப்கன் செல்வத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார், ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியை கைது செய்ய இண்டர்போலிடம் தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம் கோரிக்கை வைத்துள்ளது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் தாலிபன்கள் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் அஷ்ரப் கனியை பிடித்து தண்டிக்கவும் திட்டமிடுவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications