"செயின்ட் மார்ட்டின் தீவு!" வங்கதேச வன்முறைக்கு காரணமே இது தானாம்.. பகீர் பின்னணி.. இவ்வளவு இருக்கா
டாக்கா: வங்கதேசத்தில் மிகப் பெரிய வன்முறை போராட்டம் ஏற்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார். இதற்கிடையே இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஹசீனாவின் குற்றச்சாட்டுகள் சமீபத்தில் வெளியானது. மேலும், அதற்குக் காரணம் செயின்ட் மார்ட்டின் தீவு தான் என்றும் கூறப்பட்டது. அது என்ன செயின்ட் மார்ட்டின் தீவு.. இதன் பின்னணி, முக்கியத்துவம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, ஷேக் ஹசீனா அந்நாட்டு மக்களிடையே உரையாற்ற விரும்பினார். இருப்பினும், போராட்டக்காரர்கள் அவரது வீட்டை நெருங்கிவிட்டதால் ராணுவம் அதற்கு அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அந்த பேச்சு குறித்த தகவல்களைப் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் ஹசீனாவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்குப் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளது.
குட்டி தீவு: குறிப்பாக வங்கதேசத்திற்குச் சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவிடம் ஒப்படைத்திருந்தால், தனது அரசு நிலைத்து இருக்கும் என்பது போன்ற கருத்துகள் இருந்தன. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளன. இது குறித்து உலகளவில் விவாதம் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கச் சரி இந்த செயின்ட் மார்ட்டின்ஸ் தீவு எங்கே இருக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன.. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே வந்தது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தீவு தான் இந்த செயின்ட் மார்ட்டின் தீவு.. மியான்மருக்கு அருகிலுள்ள காக்ஸ் பஜார்-டெக்னாஃப் என்ற வங்கதேச தெற்கு தீபகற்பத்தில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தெற்கே பவளப்பாறைகளால் நிரம்பி இருக்கும் ஒரு சிறிய தீவு தான் இது.. வங்கதேசத்திடம் இருக்கும் ஒரே பவளபாறைகள் தீவு இதுதான்.
வெறும் 3 கிமீ: இந்த தீவு ரொம்பவே சிறியது. இதன் மொத்த பரப்பளவே மூன்று சதுர கிலோமீட்டர் மட்டுமே. இதில் சுமார் 3,700 பேர் வசிக்கிறார்கள். மீன்பிடித்தல், நெல் சாகுபடி, தென்னை விவசாயம் மற்றும் கடற்பாசி அறுவடை ஆகியவை இவர்களின் முக்கிய தொழில். இதை பெரும்பாலும் அவர்கள் மியான்மருக்கே ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
இந்த தீவைத் தான் ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா கேட்டதாக ஹசீனா கட்சியினர் கூறுகின்றனர். மேலும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, அங்குத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு ஈடாக இந்த தீவை அமெரிக்காவுக்குத் தாரைவார்க்க முடிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதேநேரம் அமெரிக்கா இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
தீவானது எப்படி: தென்னை மரங்கள் அதிகம் கொண்ட இந்த தீவை பெங்காலியில் நரிகேல் ஜிஞ்சிரா அதாவது தேங்காய் தீவு என்றே அழைப்பார்களாம். இது முன்பு வங்கதேசத்தின் டெக்னாஃப் தீபகற்பத்துடன் இணைந்தே இருந்தது. ஆனால், தீபகற்பத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் இது தனித்தீவாக மாறிப் போனது.
18ம் நூற்றாண்டில் இந்த தீவில் முதன்முதலில் அரேபிய வணிகர்கள் குடியேறினர். அப்போது இந்த தீவை "ஜசிரா" என்றே அழைத்துள்ளனர். 1900ல் பிரிட்டிஷ் அரசு பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இதை உள்ளடக்கியது. மேலும், இதற்கு செயிண்ட் மார்ட்டின் என்ற கிறிஸ்தவ பாதிரியாரின் பெயரைச் சூட்டியது. அதேநேரம் இந்த தீவுக்கு அப்போது சிட்டகாங்கின் துணை ஆணையராக இருந்த மார்ட்டின் என்பவரது பெயர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வரலாறு என்ன: 1947 வரை அது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. பிரிவினைக்குப் பிறகு அது பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. பிறகு 1971இல் வங்கதேசம் தனி நாடாக ஆன பிறகு அதன் கட்டுப்பாட்டில் சென்றது. இதற்காக 1974இல் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இருப்பினும், இந்த தீவை ஒட்டி இருக்கும் கடல் பகுதிகளில் எவை எல்லாம் வங்கதேசத்திற்குச் சொந்தமானது எவை மியான்மருக்கு சொந்தமானது என்பதில் மோதல் தொடர்ந்தே வந்தது. கடந்த 2012இல் சர்வதேச தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பை வழங்கியது.
தீவு விவகாரம்..வங்கக் கடலில் 'சம்பவம்' செய்ய முயன்ற அமெரிக்கா- தடுத்ததால் பதவியை இழந்த ஷேக் ஹசீனா!
பரபர குற்றச்சாட்டு: இந்த செயின்ட் மார்ட்டின் தீவு வங்காள விரிகுடாவிற்கு அருகே இருப்பதால் இது சர்வதேச அளவில் முக்கியமானதாக மாறுகிறது. குறிப்பாக இந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவும் தனது இருப்பை வலுப்படுத்த முயல்கிறது. இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் ஷேக் ஹசீனா பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதாவது அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி ஆட்சிக்கு வந்தால், அந்தத் தீவை அமெரிக்காவுக்கு விற்றுவிடும் என்று குற்றஞ்சாட்டினார். வங்கதேசத்திற்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், இதனால் பதிலடி தரும் வகையில் அமெரிக்கா இந்த தீவை கையகப்படுத்த முயல்வதாக கூறப்பட்டது. இதை அமெரிக்கா அப்போதே மறுத்து இருந்தது. இந்தச் சூழலில் தான் பல மாதங்களுக்குப் பிறகு இந்த தீவு விவகாரம் இப்போது மீண்டும் வெடித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications