அச்சுறுத்தும் புதிய வகை B.1.1.529 கொரோனா.. காற்றில் வேகமாக பரவும்.. ஆலோசிக்க கூடுகிறது "ஹூ"
ஜெனீவா: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் புதிய வேரியண்ட் குறித்து விவாதிக்க WHO ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது.
தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட்டுக்கு B.1.1.529 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
B.1.1.529 பற்றி விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAG-VE) வெள்ளிக்கிழமையான இன்று கூட உள்ளது.

புது பெயர்
புதிய வேரியண்ட், கேஸ்கள் போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் பதிவாகியுள்ளன. ஹூ கூட்டத்தில், இந்த வேரியண்ட் எப்படி குறிப்பிடப்பட வேண்டும் என்று நிபுணர்கள் விவாதிப்பார்கள். அநேகமாக கிரேக்க எழுத்துக்களில் இருந்து ஒரு பெயரை புதிய வேரியண்ட்டுக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று WHO அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.

கவலைக்குரிய விஷயம்
இதுவரை, WHO கோவிட்-19 இன் நான்கு வேரியண்ட்களை 'கவலைப்படத்தக்க வேரியண்ட்கள்' என கூறியுள்ளது. ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351), காமா (பி.1) மற்றும் டெல்டா (பி.1.617.2) ஆகியவைதான், ஹூ அதிகம் கவலைப்படும் வேரியண்ட்கள். இப்போது, அந்த வரிசையில், பி.1.1.529 சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காற்றில் பரவுகிறது
பி.1.1.529 வேரியண்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயலிழக்க வைப்பதோடு வேகமாக காற்றிலும், பரவக்கூடியதாக இருக்கலாம் என்று தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் இந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
Recommended Video

வெளிநாட்டு பயணங்கள்
கொரோனா வைரஸ் வேரியண்ட்டின் பி.1.1.529 வகைக்கான எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில், "இந்த வேரியண்ட் கணிசமாக அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால், சமீபத்தில் தளர்த்தப்பட்ட விசா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால், பொது சுகாதார பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து சர்வதேச பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications