Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய போப் தேர்தலில்.. முக்கிய பங்கு வகிக்க போகும் 4 இந்திய கார்டினல்கள்.. யார் அவர்கள்?

Subscribe to Oneindia Tamil

வாடிகன்: போப் பிரான்சிஸ் மறைவு உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உலகெங்கும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், அடுத்த போப் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. புதிய போப்பை தேர்வு செய்யும் முறையில் மொத்தம் 135 கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்களாக உள்ள சூழலில், அவர்களில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்தவர் போப் பிரான்சிஸ். கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாகப் பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 88 வயதான போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சையும் பெற வேண்டி இருந்தது. இருப்பினும், அதன் பிறகு உடல்நிலை சீரானது.

Who are the four Indian Cardinals Take Part in Papal Conclave to Elect New Pope

போப் பிரான்சிஸ் மரணம்

இந்தச் சூழலில் நேற்று திங்கள்கிழமை போப் பிரான்சிஸ் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். நேற்று காலை அவர் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உலகெங்கும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், அடுத்த போப் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

4 இந்திய கார்டினல்கள்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு முடிந்த சில நாட்களில் புதிய போப் தேர்வு செய்யப்படும் செயல்முறை தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த முறை புதிய போப் தேர்வு செய்யப்படும் செயல்முறையில் மொத்தம் 135 கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். அவர்களில் நான்கு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதாவது ஆவர்கார்டினல் பிலிப் நேரி ஃபெராவ், கார்டினல் பசேலியோஸ் கிளீமிஸ், கார்டினல் அந்தோணி பூலா மற்றும் கார்டினல் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகியோரும் புதிய போப்பை தேர்வு செய்யும் செயல்முறையில் கலந்து கொள்ள உள்ளனர்.

72 வயதான கார்டினல் பிலிப் நேரி அன்டோனியோ செபாஸ்டியாவோ டோ ரொசாரியோ ஃபெராவ்.. இவர் கோவா மற்றும் டாமன் (இந்தியா) ஆகியவற்றின் பெருநகர பேராயராகவும், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவராகவும், ஆசிய ஆயர்கள் மாநாட்டின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். கார்டினல் அந்தோணி பூலா (63). இவர் ஹைதராபாத்தின் பெருநகரப் பேராயராக உள்ளார். . அடுத்து 64 வயதான கார்டினல் பேசலியோஸ் கிளீமிஸ் தோட்டுங்கல்.. இவர் சிரோ-மலங்கரா (இந்தியா) திருவனந்தபுரத்தின் முக்கிய பேராயராகவும், சிரோ-மலங்கரா திருச்சபையின் சினோடின் தலைவராகவும் உள்ளார்.

யார் யார்!

அடுத்து 51 வயதான கார்டினல் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்... இவர் சர்கான்வலேசியோன் அப்பியாவின் எஸ் அன்டோனியோ டி படோவாவின் கார்டினல்-டீக்கனாகவும், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான டிகாஸ்டரியின் தலைவராகவும் உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதலே போ் பிரான்சிஸின் சர்வதேச பயணங்களை இவரே ஒருங்கிணைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.'

புதிய போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்

கார்டினல்கள் அனைவரும் வாடிகனில் கூடுவார்கள். அங்குள்ள சிஸ்டைன் சேப்பலுக்குள் தேர்தல் மிகவும் ரகசியமாக நடத்தப்படுகிறது. புதிய கார்டினல் குறித்து அங்கு தான் முடிவெடுக்கப்படும். ஒவ்வொரு கார்டினல்களும் தனித்தனியாக வாக்களிப்பார்கள். 80 வயதுக்குக் குறைவாக உள்ள கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக உள்ளனர். மொத்த வாக்குகளில் 3ல் இரண்டு பங்கு பெறுவோர் புதிய போப்பாக தேர்வு செய்யப்படுவார்.

பொதுவாக போப் தேர்வு செய்யும் செயல்முறை ரகசியமாகவே நடக்கும். உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியாது. தினசரி இரு முறை கார்டினல்களின் வாக்குச் சீட்டுகளை எரிக்கும்போது வெளியாகும் புகை வைத்தே மக்களால் தெரிந்து கொள்ள முடியும். அதாவது கருப்பு புகை என்றால் போப் தேர்வு செயல்முறை முடியவில்லை என அர்த்தம். வெள்ளை புகை என்றால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என அர்த்தம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+