வரலாறு திரும்புகிறது? உலகத்தை முடக்கிப்போடும் சிக்குன்குனியா.. இந்தியாவுக்கும் வார்னிங் தந்த WHO
ஜெனீவா: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பரவியது போல் இந்தியா உள்ளபட இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அபாயம் இருப்பதாகவும், கடந்த 2004-2005ம் ஆண்டை போல் இந்தியா உள்பட உலகம் முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரிக்க உள்ளதாகவும், வரலாறு திரும்புகிறது உலக சுகாதார அமைப்பு வார்னிங் கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய பெருங்கடல் தீவுகளில் சிக்குன்குனியா பரவல் இருந் வருகிறது. குறிப்பாகலா ரீயூனியன், மயோட் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட இடங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சிக்குன்குனியா பரவல் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு வார்னிங் செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா வைரஸ் தொற்று நோய் உலகத்தையே உலுக்கியது. இது இப்போது மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சிக்குன்குனியா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை தேவை. ஏனென்றால் வரலாறு மீண்டும் வருவதை நாங்கள் பார்க்கிறோம்.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் மொத்தம் 119 நாடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 5.6 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). தற்போது பலநாடுகளில் மக்கள் அதிக காய்ச்சல், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக 2004 -2005ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிக்குன்குனியா உலகம் முழுவதும் 5 லட்சம் பேரை பாதித்தது.
குறிப்பாக சிறிய தீவு நாடுகளில் பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்ற நிலை உருவாகி உள்ளது. இந்திய பெருங்கடல் தீவுகளில் லா ரீயூனியன் மயோட் மற்றும் மொரீஷியஸில் பாதிப்பகள் அதிகரித்துள்ளன. இதில் லா ரீயூனியனை எடுத்து கொண்டால் அங்குள்ள மக்கள்தொகையில் 3ல் ஒரு பங்கு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிக்குன்குனியா ஏற்கனவே மடகாஸ்கர், சோமாலியா மற்றும் கென்யாவிற்கு நுழைந்துவிட்டது. இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசியாவில் தொற்றுநோய் பரவலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலும் சிக்குன்குனியா பாதிப்பு தொடங்கிஉள்ளது. மே 1ம் தேதி முதல் பிரான்சிலும் 800 பேர் வரை சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் இந்திய பெருங்கடல் தீவுகளில் தான் சிக்குன்குனியா பரவ தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போதும் இந்திய பெருங்கடல் தீவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக சுகாதார அமைப்பு இந்த வார்னிங்கை செய்துள்ளது. சிக்குன்குனியாவை ஏடிஸ் வகை கொசுக்கள் பரப்புகின்றன. இந்த கொசுக்கள் கடிப்பதன் மூலம் நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். இதனால் பொதுமக்கள் முடிந்தவரை உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவது நல்லது. சிக்குன்குனியாவுக்கு என்று பிரத்யேகமாக சிகிச்சை இல்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறந்தது.
இதனால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். சிக்குன்குனியாவுக்கு சில அறிகுறிகள் உள்ளன காய்ச்சல், மூட்டு வலி, மற்றும் தடிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. சிக்குன்குனியா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனினும் நோய் பாதிப்பால் சில வாரங்கள் வரை மக்களை முடக்கிப்போடும் சக்தி கொண்டது. இதனால் யாராவது சிக்குன்குனியா அறிகுறி, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications