ஆட்டை கடித்து, மாட்டை கடித்து.. WHO தலைவரை குறிவைத்த இஸ்ரேல்! நூலிழையில் உயிர் தப்பிய டெட்ரோஸ்
சானா: ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பாலஸ்தீனம் மீதும், அதற்கு துணையாக நிற்கும் நாடுகள் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஏமன் மீது இஸ்ரேலின் விமானபடைகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டன. தலைநகர் சனாவில் உள்ள துறைமுகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் அதிகமாக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதலின் போது சனா விமான நிலையத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இருந்திருக்கிறார்.

WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம், சனா விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் தனது x தளத்தில், "விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நாங்கள் அங்குதான் இருந்தோம். எங்கள் விமானத்தின் பணியாளர்களில் ஒருவர் காயமடைந்தார்" என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஐநாவும், உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து கண்டித்து வருகிறது. இந்த தாக்குதலில் மக்கள் உயிரிழப்பு குறித்து இந்த இரண்டு அமைப்புகளும் பேசி வரும் நிலையில், WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications