கணவரை கொன்றவரை பழிவாங்க அரசியல் என்ட்ரி.. வங்கதேச மாஜி பிரதமர் கலிதா ஜியா யார்? இந்தியாவின் எதிரி
டாக்கா: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. இந்தியாவின் எதிரியாக செயல்பட்ட இவர் வங்கதேசத்தில் 2 முறை பிரதமராக இருந்தார். வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது மரணம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரியும், வங்கதேசத்தின் முன்னாள் அதிபருமான அவரது கணவரை கொன்றவரை பழிவாங்கும் முனைப்பில் கலிதா ஜியா அரசியலுக்கு வந்து இரும்பு பெண்மணியாக வலம் வந்தது பற்றி இங்கு பார்க்கலாம்.
வங்கதேசத்தில் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா. 1991 - 1996 மற்றும் 2001 - 2006 என 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது கட்சியின் பெயர் வங்கதேச தேசியவாத மக்கள் கட்சி (Bangladesh Nationalist People Party or BNP).

கலிதா ஜியாவுக்கு 80 வயது ஆகிறது. வங்கதேசத்தில் தற்போது வன்முறைகள் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் பிப்ரவரி மாதம் 12ம் தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பிஎன்பி கட்சி களமிறங்க உள்ளது.
ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டும் கலிதா ஜியா பிரசாரம் செய்யவில்லை. அவருக்கு 80 வயது ஆன நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்தார். கலிதா ஜியா வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்டார்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கல்லீரல் சிரோசிஸ், மூட்டுவலி, சர்க்கரை நோய், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என பல சிக்கல்களை அவர் சந்தித்தார். நவம்பர் 23ம் தேதி முதல் தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நலம் தேறவில்லை. மாறாக உடல்நலம் மோசமானது. கடந்த டிசம்பர் 11ம் தேதி முதல் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் இன்று அவர் காலமானார். இது பிஎன்பி கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலிதா ஜியா நடைபெற உள்ள தேர்தலில் போகுரா-7 தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவர் காலமாகி உள்ளார்.
கலிதா ஜியா இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக உள்ளார். சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இவர் 2 முறை பிரதமராக இருந்தபோதும் நம் நாட்டுடன் ஷேக் ஹசீனா நெருக்கமாக செயல்படவில்லை. பல்வேறு விஷயங்களில் முரண்பட்டு இருந்தார். மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் அவர் கூட்டணி வைத்திருந்தார்.
கலிதா ஜியாவின் கணவர் பெயர் ஜியாவுர் ரஹ்மான். இவர் பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாக செயல்பட்டார். பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டனாக இருந்தபோது 1960ம் ஆண்டில் கலிதா ஜியா - ஜியாவுர் ரஹ்மான் ஆகியோர் திருமணம் செய்து கொண்டார். 1971ம் ஆண்டில் இந்தியா உதவியுடன் வங்கதேசம் பிரிந்த பிறகு ஜியாவுர் ரஹ்மான் வங்கதேச ராணுவத்தில் முக்கிய பதவியை பெற்றார். வங்கதேசத்தை தனிநாடாக்க ஜியாவர் ரஹ்மானும் முக்கிய பங்காற்றிய நிலையில் அவருக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் வங்கதேச நாட்டின் 6வது ஜனாதிபதியாக ஜியாவுர் ரஹ்மான் செயல்பட்டார். அவர் தான் பிஎன்பி கட்சியை நிறுவினார். அதன்பிறகு 1981ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். 1981 ம் ஆண்டில் மே 30ம் தேதி ராணுவ அதிகாரிகள் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன்ர். அப்போது ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். இது கலிதா ஜியாவால் தாங்க முடியவில்லை.தனது கணவரை கொன்றவரை பழிவாங்க நினைத்தார்.
அதுவரை ஹவுஸ் ஒய்ப்பாக இருந்த கலிதா ஜியா அரசியலில் நுழைந்தார். கணவர் படுகொலையை தொடர்ந்து தான் கலிதா ஜியா பிஎன்பி கட்சியின் தலைவரானார். கடந்த 1984ம் ஆண்டு முதல் அவர்அந்த கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மறைந்துள்ளார். 1982ல் ஆ சர்வாதிகாரி எச்எம் எர்ஷாதின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாக கலிதா ஜியா செயல்பட்டார். இதனால் அவர் 7 முறை கைது செய்யப்பட்டார்.1990ல் எர்ஷாத் ராஜினாமா செய்தபின், அடுத்த ஆண்டு நடந்த 1991 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்று வரலாறு படைத்தார். பிறகு 2001 -2006 வரை பிரதமராக இருந்தார்.
கலிதா ஜியா தனது பதவிக்காலத்தில் கல்வி துறைக்கு முக்கியத்துவம் வழங்கினார். இலவச மற்றும் கட்டாய ஆரம்பப் பள்ளி கல்வி, 10 ஆம் வகுப்பு வரை சிறுமிகளுக்கு இலவச கல்வி, மாணவிகளுக்கு உதவித்தொகை, உணவு திட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் கொண்டு வந்து செயல்படுத்தியிருந்தார். மேலும் 2006 பிரதமர் பதவியை இழந்த பிறகு கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளிலும் கைது செய்யப்பட்டார். இருப்பினும் போர்ப்ஸ் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் 2004, 2005, 2006 என 3 ஆண்டுகள் இடம்பிடித்தார்.
கலிதா ஜியாவுக்கு 2 மகன்கள் இருந்தனர். ஒருவரின் பெயர் தாரிக் ரஹ்மான். இன்னொருவரின் பெயர் அராபத் ரஹ்மான். அராபத் ரஹ்மான் ஏற்கனவே காலமாகி விட்டார். இதனால் தாரிக் ரஹ்மான் தான் இனி அந்த கட்சியை வழிநடத்த உள்ளார். இதற்காக லண்டனில் இருந்து அவர் கடந்த 25ம் தேதி நாடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications