ஏழைகளின் ஹீரோ! ஊழலுக்கு எதிரி! ஒவ்வொரு நாளும் அமெரிக்காவை அலறவிட்ட இப்ராஹிம் ரைசி? யார் இவர்?
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு அறிவித்த நிலையில் அவர் யார் என்பது குறித்து பார்ப்போம்.
ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி. இவருக்கு வயது 63 ஆகிறது. இவர் கிழக்கு அஜர்பைஜானில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் திரும்புகையில் மோசமான வானிலையால் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து தகவலறிந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுமார் 16 மணி நேரம் கழித்து அதிபர் ரைசி பயணித்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனால் இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 8 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதையடுத்து ரைசியின் மரணத்திற்கு பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள், உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 63 வயதான இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டில் மிகப் பெரிய ஆளுமை திறன் கொண்டவராக இருந்தது எப்படி என்பது பார்க்கலாம். ரைசி தனது 15 ஆவது வயதிலேயே மத போதனைகளை சொல்லித் தரும் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் படித்தார். அந்த காலத்தில் அவர் நிறைய முஸ்லீம் அறிஞர்களிடம் பாடங்களை கற்றறிந்தார்.
தனது 20ஆவது வயதில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அரசு தரப்பு துணை வழக்கறிஞராக பதவியேற்றார். பிறகு 1983 ஆம் ஆண்டு ஜமீலா அலமோல்ஹோடா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 1988 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளை தூக்கிடும் குழுவை மேற்பார்வையிடும் கமிட்டியில் ஒரு உறுப்பினராக 5 மாதங்கள் இருந்தார். இவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில் ரைசிக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
ஈரானின் முதல் தலைவர் அயோதுல்லா ருஹோல்லா கோமைனி இறப்புக்கு பின்னர் 1989 ஆம் ஆண்டு டெஹ்ரானின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 62 சதவீத வாக்குகளை பெற்று ரைசி அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடிய சமூக ஆர்வலர், மூத்த அரசியல் தலைவர், ஏழைகளின் நாயகன் என ரைசி அழைக்கப்பட்டு வந்தார். ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக மக்களிடையே இவர் அடிக்கடி பிரச்சாரம் செய்ததால்தான் இந்த தேர்தலில் வென்றார். மேலும் ஊழல் செய்யும் உயரதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களுடைய பெயர், விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ரைசி.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் முன்னாள் அதிபர் ஹாசன் ரோஹானி கையெழுத்திட்டதை ரைசி கடுமையாக விமர்சித்திருந்தார். ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்கி அதன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தினார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தாலும் ஈரான் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வந்ததில் ரைசி சிறந்த தலைவராக கருதப்படுகிறார்.
ஈரானில் கடந்த 2022 ஆம் ஆண்டு குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப்பை அணியவில்லை என கூறி தெர்ஹான் செல்லும் வழியில் அவரை போலீஸார் வழிமறித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும் அங்கும் அந்த பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது. இதனால் கோமாவுக்கு சென்ற அந்த பெண் சில நாட்களில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரத்தில் ஏராளமான பெண்கள் ஹிஜாப்பை தீ வைத்து கொளுத்தியும் தங்கள் தலைமுடியை வெட்டியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது 500 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மனிதத்திற்கு எதிராக ஈரான் குற்றங்களை செய்து வருவதாக ஐநா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை












Click it and Unblock the Notifications