எப்ப பார்த்தாலும் மக்களை கொலை செய்வது பற்றியே பேசி வந்த உமர் மாட்டீன்
மயாமி: ஆர்லான்டோவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்து 50 பேரை சுட்டுக் கொன்ற நபர் மக்களை கொலை செய்வது குறித்து தன்னுடன் வேலை பார்த்த ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் இருக்கும் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்த உமர் மாட்டீன்(29) என்பவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் பலியாகினர், 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் உமர் மாட்டீன் பற்றிய விபரங்கள் பல கிடைத்துள்ளன.

உமர்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த தந்தைக்கு பிறந்தவர் உமர் மாட்டீன். நியூயார்க் நகரில் பிறந்த அவர் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் செயின்ட் லூசி பகுதியில் வசித்து வந்தார். 2007ம் ஆண்டு ஜி4எஸ் நிறுவனத்தில் சேர்ந்த அவர் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி வந்தார்.

கொலை
உமர் தன்னுடன் பணியாற்றிய டேனியல் கில்ராய் என்பவரிடம் மக்களை கொலை செய்வது குறித்து பேசியுள்ளார். உடனே கில்ராய் இது பற்றி நிறுவனத்திடம் தெரிவிக்க கடுப்பான உமர் அவரை பின்தொடர்ந்துள்ளார். தினமும் 30 எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். உமரின் தொல்லை தாங்காமல் கில்ராய் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். உமர் எப்பொழுது பார்த்தாலும் மக்களை கொலை செய்வது பற்றியே பேசி வந்தார் என கில்ராய் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள்
சில வாரங்களுக்கு முன்பு தான் உமர் இரண்டு துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். மயாமியில் தனது 3 வயது மகனுடன் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு ஆண்கள் முத்தமிட்டதை பார்த்து கோபத்தில் கொந்தளித்துள்ளார் உமர்.

தொழுகை
பள்ளிவாசலுக்கு கடைசி ஆளாக தொழுக வரும் உமர் முதல் ஆளாக கிளம்பிவிடுவார் என இமாம் தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் உமர் யாருடனும் பேசியது இல்லையாம். மிகவும் அமைதியாக இருந்ததாக இமாம் கூறியுள்ளார்.

மனநல பாதிப்பு
உமர் எதற்கெடுத்தாலும் தன்னை அடித்து வந்ததாக அவரின் முதல் மனைவி தெரிவித்துள்ளார். உமர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று தான் நடந்து கொண்டார். மதத்தின் மீது அவருக்கு பெரிய பற்று எல்லாம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications