நடக்கவே முடியாது! ஒரு கண்ணும் இல்லை! ஆனாலும் இஸ்ரேலை அலறவிடும் முகமது டெயிஃப்! 20 ஆண்டு பகை தெரியுமா
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் கண்களில் மண் தூவி மெகா தாக்குதலை ஹமாஸ் படை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட் யார்... இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் படையினர் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். வெறும் 20 நிமிடத்தில் 5000 ஏவுகணைகளை ஏவினர். மேலும், இஸ்ரேல் நாட்டிலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த மோசமான தாக்குதலில் மொத்தம் 900 பேர் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் படையிடம் இருந்து இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதலை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்தத் தாக்குதலுக்குக் காசா அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்த ஹமாஸ் நிழல் தலைவரான முகமது டெய்ஃப் முக்கிய காரணம். யார் அவர். இந்தத் தாக்குதலை எப்படி வெற்றிகரமாகச் செய்தார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.
முகமது டெய்ஃப்: இந்த முகமது டெய்ஃப் கடந்த 2002ஆம் ஆண்டு முதலே ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவுக்குத் தலைவராக இருக்கிறார். அவர் துல்லியமாக எப்போது பிறந்தார் எனத் தெரியவில்லை. இருப்பினும், அவர் 1960களில் பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் முகமது தியாப் இப்ராஹிம் அல்- மஸ்ரியாகப் தம்பதிக்குப் பிறந்தார். காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். மாற்றுத்திறனாளியான முகமது டெய்ஃப் கடந்த 20 ஆண்டுகளாக ஹமாஸ் படையை வழிநடத்தி வருகிறார்.
அப்போது 1948 முதல் 1967 வரை, காசா காசா எகிப்திய கட்டுப்பாட்டில் இருந்தது.. 1967 ஜூன் மாதம் நடந்த 6 நாள் யுத்தத்திற்குப் பின்னரே இது இஸ்ரேல் ஆட்சியின் கீழ் வந்தது. அந்த போரில் சினாய் தீபகற்பம், காசா பகுதி, மேற்குக் கரை, ஜெருசலேம் பழைய நகரம் மற்றும் கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
வீல் சேர்: மாற்றுத்திறனாளியான இவர், வீல் சேரில் இருந்தபடி இத்தனை ஆண்டுகளாக ஹமாஸ் படையை வழிநடத்தி வருகிறார். இவரை அமெரிக்கா தேடப்படும் பயங்கரவாதியாகப் பட்டியலிட்டுள்ளது. யெஹ்யா அய்யாஷ் என்பவரை இந்த முகமது டெய்ஃப் தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ளார். இவர் ஏவுகணைகள், ராக்கெட் லான்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்களில் சிறந்து விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெய்ஃப் ஹமாஸ் படைக்குள் எப்படி வந்தார் என பார்க்கும் முன்பு ஹமாஸ் படை குறித்து முதலில் பார்க்கலாம். அங்குள்ள மேற்குக் கரை மற்றும் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அதை எதிர்த்துப் போராடக் கடந்த 1987இல் நிறுவப்பட்டது தான் ஹமாஸ் படை. அப்போது முதலே இவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி காலம்: மற்ற பாலஸ்தீன வீரர்களைப் போலவே டெய்ஃப்பும் கல்லூரியில் படிக்கும் போது ஹமாஸ் படையுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போதே அவர் இஸ்ரேலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதாகச் சிறையிலும் அடைக்கப்பட்டார். இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முகமது டெய்ஃப், சர்வதேச நாடுகள் பாலீஸ்தீன விவகாரத்தில் தீர்வை கொண்டு வர எந்தவொரு முயற்சியையும் எடுப்பதில்லை என்றும் சாடி வருகிறார்.
20 ஆண்டு பகை: பல ஆண்டுகளாக இவரைத் தீர்த்துக் கட்ட இஸ்ரேல் முயன்று வருகிறது. இஸ்ரேல் நாட்டில் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக இவர் பட்டியலிடப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்த இவர், நூலிழையில் அதில் இருந்து தப்பிப் பிழைத்தார். இருப்பினும், அந்த தாக்குதலில் தான் அவர் ஒரு கண், ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்தார். அந்த கொடூர தாக்குதலில் அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் இழந்தார்.
அதன் பிறகு வீல்சேரில் முடங்கிய முகமது டெய்ஃப், அதன் பிறகும் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டை செய்து வருகிறார். இவரைக் கொலை செய்யக் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இஸ்ரேல் அரசு பல முறை முயன்றது இருப்பினும், அவை அனைத்தில் இருந்தும் தப்பிய முகமது, இப்போது அடுத்த தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications