'Mu, C.1.2..' என தொடர்ந்து உருமாறும் கொரோனா.. பழைய வேக்சின்கள் என்னவாகும்? WHO கூறும் பகீர் தகவல்கள்
ஜெனீவா: புதிய உருமாறிய மூ கொரோனா வைரஸை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அது வேக்சினில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் எச்சரித்துள்ளது. அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் தற்போது புதிதாக C.1.2 என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா பரவிய நிலையில், அதை முழுவதுமாக தடுத்து நிறுத்துவது என்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாக உள்ளது.
குறிப்பிட்ட காலம் ஒரு பகுதியில் வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தாலும், இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது.

உருமாறிய கொரோனா வகைகள்
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளில் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாவால் உலக நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தற்போது புதிதாகக் கண்டறியப்பட்ட கொரோனா வகை குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

B.1.621 கொரோனா வகை
B.1.621 என்ற இந்த கொரோனா வகைக்கு மூ உருமாறிய கொரோனா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொலம்பியா நாட்டில் இந்த மூ கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் பல நாடுகளுக்கு மூ கொரோனா பரவியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஹாங்காக் ஆகிய நாடுகளிலும் இது கண்டறியப்பட்டுள்ளது. மூ கொரோனாவை கண்காணிக்க வேண்டிய கொரோனா வகையாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

வேகமாக பரவும் மூ
கொலம்பியா நாட்டில் தற்போது கண்டறியப்படும் கொரோனா பாதிப்புகளில் 39% பேர் மூ கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஈக்வடாரில் 13% பேருக்கு மூ கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த உருமாறிய கொரோனா இதுவரை 39 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் காலங்களில் இந்த வைரஸ் எப்படி நடந்து கொள்கிறது என்பது மிக முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேக்சினில் இருந்து தப்பலாம்
குறிப்பாக இந்த உருமாறிய மூ கொரோனா பாதிப்பு வேக்சினில் இருந்து தப்பவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பீட்டா கொரோனா வகைக்கு இணையாக மூ கொரோனாவும் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இது குறித்து உடனடியாக கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

C.1.2 உருமாறிய கொரோனா
அதேநேரம் தென் ஆப்பிரிக்காவிலும் இப்போது புதியதொரு உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய C.1.2 கொரோனாவும் ஆபத்தான ஒன்று என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன. இந்த C.1.2 உருமாறிய கொரோனா, கடந்த ஆகஸ்ட் 13 வரை சீனா, காங்கோ ஜனநாயக குடியரசு, மொரிஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த உருமாறிய கொரோனாவால் பாதிப்புகள் குறைவு என்றே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எந்தவொரு வைரசும் உருமாறுவது இயல்பு தான். அப்படி உருமாறும்போது பெரும்பாலான கொரோனா வகைகள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. சில வகை மட்டுமே மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications