உள்ளாடையில் விஷம்! கொலை முயற்சியில் இருந்து எஸ்கேப்.. புதின் தூக்கத்தை கெடுத்த நவல்னி பலி! யார் இவர்
மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவராக இருந்த அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், யார் அவர்.. ரஷ்யாவில் அவர் என்ன செய்துள்ளார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அதையும் தாண்டி ரஷ்யாவில் சர்வ வல்லமை கொண்ட புதினை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி. ரஷ்ய அதிபர் புதினின் சொத்து, அவரது ஆடம்பர வாழ்க்கை குறித்துத் தொடர்ந்து பல செய்திகளை வெளியிட்டு வந்தார்.

இதற்கிடையே சில வழக்குகளுக்காக அலெக்ஸி நவல்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் எதிர்பாராத விதமாக இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்: அலெக்ஸி நவல்னி வாக்கிங் சென்றுவிட்டுத் திரும்பிய போது அவருக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சு வலி ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார் என்றும் அவரை காப்பாற்ற மருத்துவ ஊழியர்கள் முயன்ற போதிலும் அதில் பலன் கிடைக்கவில்லை என்று ரஷ்யச் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினையே ஆட்டம் காண வைத்த இந்த அலெக்ஸி நவல்னி யார்.. அவர் எதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரஷ்யாவில் புதினுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முக்கிய தலைவராக நவல்னி பார்க்கப்பட்டார். அங்கே அவருக்குப் பெருந்திரளான மக்கள் ஆதரவும் இருந்தது. சிறையில் இருந்தாலும் நவல்னி ஒரு நாள் விடுதலையாகி நாட்டை வழிநடத்துவார் என்றே அவரது தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், அப்படி எதுவும் நடக்காமல்.. சிறையிலேயே அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
செல்வாக்கு: ரஷ்யாவில் உள்ள ஊழல்களை இணையம் மூலம் அம்பலப்படுத்தியதில் அங்கு பெரும் செல்வாக்கைப் பெற்றவர் நவல்னி.. அதேநேரம் அவரது சில கருத்துகளைச் சர்ச்சையைக் கிளப்புவதாகவும் இருந்துள்ளன. ரஷ்ய மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வெளிநாட்டு மக்கள் ரஷ்யாவுக்கு வந்து குடியேறுவதை முழுமையாகத் தடை செய்வேன் என்பது போல அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இருப்பினும், அதையும் தாண்டி ரஷ்யாவில் அவருக்கு வலுவான செல்வாக்கு இருந்தது.
கடந்த 2011இல் புதினுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 2013ல் அவர் மாஸ்கோ மேயர் தேர்தலில் போட்டியிட்டார். ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரை புறக்கணித்த போதிலும் நவல்னி 27% வாக்குகளைப் பெற்றிருந்தார். இதே நிலை போனால் அவர் எதாவது ஒரு தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என அஞ்சி ரஷ்யா அரசு நிர்வாகம், அவர் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாத வகையில் தடை விதித்தது.
நக்கல் வீடியோக்கள்: அதன் பின்னரே தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல அவர் யூடியூப் வீடியோக்களை பயன்படுத்த ஆரம்பித்தார். புதினின் செல்வச் செழிப்பான வாழ்க்கையை அம்பலப்படுத்தி அதை நக்கலடிக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட்டார். இதுபோன்ற வீடியோக்கள் தான் அவரை ரஷ்யா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாற்றியது.
நவல்னி கூறும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் புதின் தரப்பு தொடர்ந்து மறுத்தே வந்துள்ளது. நவல்னியை பயங்கரவாதி என்ற ரஷ்ய அரசு, அவருக்கு அமெரிக்கப் புலனாய்வு அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 2020இல் அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடத்தப்பட்டது. நேரடியாக நரம்பைத் தாக்கும் நோவிச்சோக் என்ற சோவியத் கால கெமிக்கலை வைத்து அவரை காலி செய்ய முயன்றனர்.
ஷாக்.! ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்த அலெக்ஸி நவல்னி சிறையிலேயே மர்மமான முறையில் மரணம்! என்ன நடந்தது
உள்ளாடையில் விஷம்: அவருக்கு ஜெர்மனியில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் பிழைத்தார். அப்போது ரஷ்ய ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு அவர்கள் வாயாலேயே விஷம் வைத்ததை ஒப்புக்கொள்ளவும் வைத்திருந்தார்.. நவல்னி உள்ளாடையில் விஷத்தைத் தடவியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதெல்லாம் அவரது இமேஜை பல மடங்கு உயர்த்தியது. ஆனால், ரஷ்யா வழக்கம் போல இதையும் மறுத்தது.
அவர் அப்படியே வெளிநாட்டில் இருந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2021 அவர் ரஷ்யாவுக்குத் திரும்புவதாக அறிவித்தார். ரஷ்யாவில் வந்திறங்கிய உடனேயே அவர் கைதும் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை காரணமாகவே அவர் சிறையில் இருந்த நிலையில், இப்போது அங்கேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications