உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெப்பெசோஸ்.. அலுவலகத்திற்கு பைஜாமாவில் வந்தது ஏன்?.. உருக்கமான காரணம்!
அமேசான் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான ஜெப்பெசோஸ் அலுவலக மீட்டிங்கிற்கு பைஜாமா அணிந்து வந்தது வைரலாகி உள்ளது.
நியூயார்க்: அமேசான் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான ஜெப்பெசோஸ் அலுவலக மீட்டிங்கிற்கு பைஜாமா அணிந்து வந்தது வைரலாகி உள்ளது.
உலகம் முழுக்க ஒவ்வொரு அலுவலங்களிலும் ஒவ்வொரு விதிமுறை இருக்கிறது. இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், இப்படி அணிய கூடாது என்று விதி இருக்கிறது.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப்பெசோஸ் அலுவலக மீட்டிங்கிற்கு பைஜாமா அணிந்து வந்துள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் அலுவலகத்திற்கு இப்படி வந்தது ஏன் என்று இணையம் முழுக்க கேள்வி எழுந்துள்ளது.

நம்பர் 1
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. இதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்தார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர் என்று கூறப்பட்டுள்ளது. ஜெப்பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார். அமேசான்தான் இப்பொது உலகில் நம்பர் ஒன் பணக்காரரை கொண்ட நிறுவனம் ஆகும்.

பைஜாமாவுடன் வந்தார்
இந்த நிலையில் நேற்று அமேசான் அலுவலகத்தில் நடந்த போர்ட் மீட்டிங்கில் கலந்து கொள்ள ஜெப்பெசோஸ் பைஜாமாவுடன் வந்துள்ளார். தூங்கி எழுந்தது போல, ஜெப்பெசோஸ் பழைய டீ சர்ட் ஒன்றையும் அணிந்து கொண்டு வந்திருந்தார். அவர் இப்படி வந்தது உலகம் முழுக்க வைரலானது.

உருக்கமான காரணம்
இந்த நிலையில் இதற்கு ஜெப்பெசோஸ் காரணம் சொல்லியுள்ளார். அதன்படி, உலகம் முழுக்க கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளதாக கூறியுள்ளார். இதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்வதன் மூலம், அவர்கள் குறித்த செய்தி உலகம் முழுக்க தெரியும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

பணம் திரட்ட போகிறார்
அதுமட்டுமில்லாமல் உலகம் முழுக்க அமேசான் பணியாளர்களை பைஜாமா அணிந்து வரும்படியும் அவர் கூறியுள்ளார். இந்த மாதம் குழந்தைகள் கேன்சர் விழிப்புணர்வு மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்காக விரைவில் நிதி திரட்ட இருப்பதாக இவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications