"ஹுஹும்.. சுத்தமாக பத்தாது.." சீன ராணுவத்திற்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு.. அதிகரிக்கும் பதற்றம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சீன ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது அவர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலகளவில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனா, தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களிலும் உலக நாடுகளுடன் மோதல் போக்கையே கொண்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் என்று இந்த லிஸ்ட் போய் கொண்டே இருக்கும்.
இதனிடையே சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, உலக நாடுகளுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மோதல் போக்கு
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், போர்களை வெல்வதற்காகச் சீன ராணுவம் புதிய தேசியளவிலான உத்திகளை வகுக்க வேண்டும் என்றார். குறிப்பாகச் சீன ராணுவப் படைகளை விரைவாக உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சீன அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங் தான், அங்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் சீன ராணுவத்தின் தலைவராகவும் இருக்கிறார். இதற்கிடையே நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சீன ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

போரில் வெல்ல
இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜி ஜின்பிங்க், தேசிய உத்திகள் மற்றும் திறன்களை ஒருங்கிணைத்து மேம்படுத்துவது நவீன சோசலிச நாட்டைக் கட்டியெழுப்புவதில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். 2027இல் சீன ராணுவத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நிலையில், அதற்குள் இலக்குகளை அடையத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். போர்களில் வெற்றி பெறுவதற்குப் பாதுகாப்பு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைகளை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகத் தரத்திற்கு ராணுவம்
மேலும், சீன ராணுவத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "சீனாவின் வளர்ச்சியை நாம் அதிகப்படுத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வலிமையை முறையாக மேம்படுத்தும் முயற்சியில், நாம் ஈடுபட வேண்டும்.. புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இதை மையப்படுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாம் வளர்க்க வேண்டும். இதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்மால் புது புது இலக்குகளை விரைவாக அடைய முடியும்.

தொழில்துறை ரொம்பவே முக்கியம்
புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் திறன்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்போது தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் இருக்கும் பிரச்சினைகளையும் நாம் சரி செய்ய வேண்டும். தேசிய நலன்களைப் பாதுகாக்க முக்கிய உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவது.. தேசிய இருப்புக்களைக் கட்டியெழுப்புவது முக்கியம். சீர்திருத்தம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இருந்து வேகத்தைப் பெற வேண்டும். இதுவே பிரச்சினைகளைச் சரி செய்யவும் வளர்ச்சியை வேகப்படுத்தவும் இருக்கும் வழியாகும்" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா சீனா
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் உளவு பலூன் விவகாரத்திற்குப் பிறகு பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று தான் சீ அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் எல்லா இடங்களிலும் கட்டுப்படுத்துதல் மற்றும் அடக்குமுறையைக் கொள்வதாகச் சாடியிருந்தார். மேலும், அமெரிக்காவின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் சீனாவின் வளர்ச்சியைப் பாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடரும் மோதல்
அதேபோல செவ்வாயன்று சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங்கும் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்தார். சீனாவின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றியடையாது என்று கூறினார். இதுபோல இரு நாடுகளுக்கும் இடையேயான வார்த்தை மோதல் தொடர்ந்து வரும் நிலையில், சீன அதிபரின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications