அவசர அவசரமாக.. பங்கருக்குள் சென்ற இஸ்ரேல் நெதன்யாகு.. பக்கா பிளானிங்.. என்ன காரணம்?
டெஹ்ரான்: கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2-3 இஸ்ரேலின் டாப் தலைவர்கள் பங்கரில் பதுங்கி இருந்துள்ளனர். பங்கரில் இருந்தபடியே இவர்கள் தாக்குதலை கண்காணித்துள்ளனர்.

பொதுவாக இது போன்ற பெரிய தாக்குதல் சமயங்களில் தலைவர்கள் பங்கருக்குள் செல்வது வழக்கம். அப்படிதான் பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்று இருந்தார். அதோடு ஈரான் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தலாம்.. வானத்தில் விமானங்களை அனுப்பி டாக் பைட் நடத்தி இருக்கலாம்.. விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்கப்பட்டது. இதற்கு அடுத்து பாதுகாப்பு கருதி.. பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் தரப்பு வாதம்:
1. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டைல் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
2. ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
3. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
4. குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
5. இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
6. முக்கியமாக இஸ்ரேலுக்கு சொந்தமான F-35 'Adir’ ஸ்டெல்த் ஃபைட்டர்கள்.. தோராயமாக 2,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
7. முக்கியமாக ஈரானிய ராணுவத்திற்கு சொந்தமாக சொந்தமான ஏவுகணை தயாரிப்பு நிலையத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் மற்ற பைட்டர் உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலைமை மோசமாகி உள்ளது ஈரான் வாதம்:
1. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
2. இஸ்ரேல் விமானங்கள் உள்ளே வந்தாலும் அவர்களின் குண்டுகளை ஈரானின் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்துள்ளன.
3. ஈரானின் போர் விமானங்கள் உடனே வானிற்கு வந்ததால் இஸ்ரேல் விமானங்கள் வெளியேறிவிட்டனர்.
4. இதனால் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.
5. இஸ்ரேலிய ராணுவம் மூன்று அலை தாக்குதல்களில் நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஆனால் அவை பெரிய சேதம் ஏற்படுத்தவில்லை.
6. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
7. இஸ்ரேலிய தாக்குதல்கள் Ilam, Khuzestan மற்றும் Tehran மாகாணங்களில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து, குறைந்த அளவு சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியதாக ஈரான் தெரிவித்து உள்ளது. ஈரானினின் ரேடார் அமைப்புகள் முதலில் F-35 'Adir’ ஸ்டெல்த் ஃபைட்டர்கள் மூலம் தாக்கப்பட்டது. . ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
வெற்றி யாருக்கு?: இரண்டு தரப்பு வேறு வேறு கருத்துக்களை சொல்வதால் இந்த மோதலில் இதுவரை யார் வென்றது என்பது தெளிவாக வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications