கடைசி நேரத்தில் அடி வாங்கிய ரஷ்யா.. லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்தது ஏன்? விரிவான தகவல்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: இந்தியாவுக்கு போட்டியாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவால் ஏவப்பட்ட லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. தென் துருவத்தில் ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை பெறும் திட்டத்துடன் களமிறக்கப்பட்ட ரஷ்யாவின் விண்கலம் திட்டம் தோல்வி அடைந்தது ஏன் என பார்க்கலாம்.

நிலவின் தென்துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யவில்லை. எனவே, தென் துருவத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

Why did the Luna 25 spacecraft that went to explore the moon fall on the moon?

சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக சென்றது. தற்போது வரை சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி செயல்பட்டு வருகிறது. நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்த பிறகு பிறகு ஆர்ப்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்துள்ளது. அதன்பிறகு படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கமான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 18 ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் குறைந்தபட்சமாக 113 எனவும், அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து இன்று அதிகாரலை விக்ரம் லேண்டர் நிலவை இன்னும் கிட்ட நெருங்கி உள்ளது. இன்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டருக்கும், நிலவுக்கும் இடையேயான தூரம் என்பது குறைந்தபட்சமாக 25 கிலோமீட்டராகவும், அதிகபட்சமாக 134 கிலோமீட்டராகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்தக்கட்டமாக நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை மெதுவாக தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் துவங்கி உள்ளனர். 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. இதற்கிடையே,ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்ய லூனா -25 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்த நிலையில், லுனா விண்கலத்தை ரஷ்யா ஆகஸ்ட் 10 ஆம் தேதி விண்ணில் ஏவியது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.10 மணியளவில் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா, நிலவில் மீண்டும் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை ஏவியுள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை ஐந்தே நாளில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன்பிறகு 4 முதல் ஐந்து நாட்கள் நிலவின் பாதையில் சுற்றும் இந்த விண்கலம் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான சரியான இடத்தை ஆய்வு செய்து அதன்பிறகு தரையிறங்கும் படி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

சக்தி வாய்ந்த ராக்கெட் மூலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை வெறும் ஒரே வாரத்தில் லுனா சென்றடைந்து விட்டது. அதாவது, ஆகஸ்ட் 10 ஆம்தேதி ஏவபட்ட விண்கலம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தரையிறங்கும் என சொல்லப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் 23 ஆம் தேதிதான் தரையிறங்க திட்டமிட்டு இருந்த நிலையில், 21 ஆம் தேதியே லுனா 25 தரையிறங்கும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால், லுனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பை நெருங்கும் போது சிக்கலை சந்திதத்து. அதாவது, விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு லுனா 25 விண்கலத்தை அனுப்ப முடியவில்லை. இதனால், தொடர்ந்து தனது பாதையிலையே லுனா 25 விண்கலம் சுற்றி வந்துள்ளது.

இதனால், விண்கலம் திட்டமிட்டபடி நாளை நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்குமா? என்ற பில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. ரஷ்ய விஞ்ஞானிகள் மட்டும் இன்றி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த அத்தனை நாடுகளும் உன்னிப்பாக இந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செல்வதற்கு தாமதம் ஆன ரஷ்ய விண்கலம் கடைசியில் விழுந்து நொறுங்கியது.

லுனா 25 விண்கலம் திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா விண்கலம் அனுப்பியது. உக்ரைன் போர் உள்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ரஷ்யா விண்வெளி திட்டத்தில் கவனம் செலுத்தியது அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கும் உற்சாகத்தை கொடுத்த நிலையில், தற்போது லுனா 25 தோல்வியால் சற்று கவலை அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+