இந்த ஊரில் பிறப்பதற்கும் தடை, இறப்பதற்கும் தடை.. ஆனா மக்கள் தொகை ஏறுதே.. அது எப்படி! சுவாரஸ்யம்!
ஆஸ்லோ: உலகில் பல்வேறு பகுதிகளில் பல வினோதமான சட்டங்கள் இருக்கும் நாம் பார்த்திருப்போம். நமது நாட்டிலேயே கூட சில பகுதிகளில் மட்டும் சில குறிப்பிட்ட சட்டங்கள் இருக்கும். ஆனால், இங்கு நார்வே நாட்டில் உயிரிழக்கத் தடை விதிக்கும் சட்டம் இருக்கு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆர்க்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள நார்வே நாட்டிற்குச் சொந்தமான தீவு ஸ்வால்பார்ட். அந்தத் தீவில் உள்ள நகரம் தான் லாங்யர்பியன்.. உலகில் இருக்கும் வினோதமான இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு நீங்கள் யோசிக்காத ஒரு உள்ளூர் சட்டம் உள்ளது.. அது தனித்துவமானது மட்டுமல்ல, விசித்திரமானதாகவும் இருக்கிறது.

உயிரிழக்கத் தடை
அதாவது இந்த லாங்யர்பியன் நகரில் உயிரிழக்கக்கூடாது. இங்கு இறப்பது என்பது சட்டவிரோதமானதாகும். ஏதோ ஆன்மீகக் காரணத்திற்காக இதுபோல சட்டம் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படி இல்லை. இதற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இல்லை. இது முழுக்க முழுக்க அறிவியலுடன் தொடர்பு இருக்கும் மேட்டர். அந்தச் சட்டத்தைப் புரிந்து கொள்ள, நாம் லாங்யர்பியனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும்.
லாங்யர்பியன் உலகில் மிகவும் குளிரான இடங்களில் ஒன்றாகும். இங்கு மிகவும் குளிரான நாட்களில் -46.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் போகும். அதேபோல வெப்பமான நாட்களிலும் கூட அதிகபட்ச வெப்பமே 3-7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். அதுதான் ஆர்க்டிக் காலநிலை. இத்தகைய கடுமையான சூழல் இருந்தாலும் இங்கு இறப்பது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் இதுதான்
இவ்வளவு குளிரான கிளைமேட் இருப்பதால் இங்குள்ள நிலங்கள் உறைந்து இருக்கும். இதனால் நிலத்தில் தோண்டுவது கடினம்.. அதைத் தாண்டிக் கஷ்டப்பட்டுக் குழி தோண்டிப் புதைத்தாலும் கூட.. எத்தனை காலம் ஆனாலும் உடல் சிதைவடையாமல் அப்படியே இருக்கும். இதுவே மேஜர் பிரச்சினை.
சாதாரணமாக நாம் உடலைப் புதைத்தால்.. அது சில நாட்களிலேயே அழுகத் தொடங்கும். சில பல ஆண்டுகளில் அவை மொத்தமாக மக்கி மண்ணோடு மண்ணாக மாறிவிடும். ஆனால், இங்கு ஓவர் குளிர் இருப்பதால் உடல் மக்கிப் போகாது, அப்படியே இருக்கும். சதை மற்றும் எலும்புகள் மட்டுமின்றி அதில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் கூட அப்படியே இருக்கும். இங்குப் புதைக்கப்பட்ட உடலை எடுத்து ஆய்வு செய்த போது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கூட அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸ் பாக்டீரியா அழியாது
எனவே, ஒரு நபர் ஒரு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தால் அவரது உடலில் இருக்கும் வைரஸ் புதைத்த பிறகு அழியாது. அப்படியே இருக்கும். வரும் காலத்தில் இந்த இடம் உருக ஆரம்பித்தால் அந்த வைரஸ்கள் சுற்றுச்சூழலில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. இதன் காரணமாகவே 1950ஆம் ஆண்டில், நார்வே அரசு ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த நகரின் எல்லைகளுக்கு உடலைப் புதைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், நகரில் இருந்த கல்லறைகளும் மூடப்பட்டன.
ஆனால், வயதானால் மக்கள் இறக்கத் தானே செய்வார்கள். அப்போது என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். லாங்யர்பியனில் உயிரிழக்கும் தறுவாயில் இருக்கும் மக்கள் நார்வே நாட்டின் பிரதான நிலப்பகுதிக்கு 2000 கி.மீ தூரம் கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு உயிரிழந்த பிறகு உடல் புதைக்கப்படும்.
பிறப்பிற்கும் கட்டுப்பாடு
இங்கு இறப்புக்கு மட்டுமல்ல, பிறப்புக்கும் கூட தடை இருக்கிறது. ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். அதிகாரப்பூர்வத் தடை இல்லை என்றாலும் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் நார்வேயின் பிரதானத் தீவுக்கு சென்றுவிடுவார்களாம். இந்த லாங்யர்பியன் நகரில் பிரசவத்திற்குச் சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால், கர்ப்பிணிப் பெண்கள் இங்குக் குழந்தை பெறுவதில்லை. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நார்வேயின் பிரதானப் பகுதிக்குச் சென்றுவிடுவார்களாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications