அதே அக்டோபர்.. 50 ஆண்டு வன்மம்! நேரம் பார்த்து இஸ்ரேலை அடிக்கும் ஹமாஸ்! ரத்த சரித்திரத்தின் பின்னணி
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நீண்டகாலமாக தொடரும் மோதல் நேற்று போராக மாறியுள்ளது. ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதல் தான் இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தாலும் கூட அதற்கு அக்டோபர் மாதத்தை தேர்வு செய்ததன் பின்னணியில் 50 ஆண்டு வரலாறு உள்ளதாம்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கி உள்ளது. நேற்று காலையில் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் தீவிராவதிகள் இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து போனது. மக்கள் அனைவரும் உயிர் காக்கும் வகையில் வீடுகளில் முடங்கினர். அதோடு இஸ்ரேலும் பதிலடியை தொடங்குவதாக அறிவித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடங்கி விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இஸ்ரேலின் தெற்குபகுதியில் உள்ள நகரங்களில் நுழைந்த ஹமாஸ் தீவிராதிகளை இஸ்ரேல் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அதேபோல் காசா பகுதிகளிலும் போர் விமானங்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் படையை தாக்கி வருகின்றனர். இப்படி போர் நடந்து வருகிறது. தற்போது வரை 500க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இஸ்ரேலை பழிவாங்க துடித்த ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வந்துள்ளனர். இந்த திட்டத்தை தான் அவர்கள் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்து ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அக்டோபர் மாதத்தை ஏன் தேர்வு செய்தது? என்பதன் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது தற்போதைய காசா உள்பட பாலஸ்தீனத்தின் வேறு சில பகுதிகளில் இதற்கு முன்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருந்தது. அதாவது கடந்த 1967 ல் 6 நாட்கள் நடந்த போர் மூலம் கோலன் ஹைட்ஸ், சினாய் உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இதனை அரபு நாடுகள் விரும்பவில்லை.
இந்நிலையில் தான் கடந்த 1973ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் வந்தது. அப்போது அரபு நாடுகளின் கூட்டமைப்பு பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாக்குதல்களை நடத்தியது. இதையடுத்து இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இருதரப்புக்கும் யுத்தம் தொடங்கிய நிலையில் யோம் கிப்பூர் போர் உருவானது.
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி /ரிச்சர்ட் நிக்சன் உலகளாவிய அணுஆயுதம் தொடர்பாக எச்சரிக்கையும் செய்தார். அதோடு ஓபிஇசி எனும் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு சார்பில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்தின. இது உலகளவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
இதற்கிடையே 2 வாரங்கள் நடந்த யோம் கிப்பூர் போரில் 20 ஆயிரம் பேர் பலியாகினர். பாலஸ்தீனத்துக்கு அதிக உயிர் பலி ஏற்பட்டது. மேலும் போர் முடிவில் ஏற்கனவே இஸ்ரேல் கைப்பற்றி இருந்த பகுதிகளை விட கூடுதலான இடங்களை தன்வசப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் 50 ஆண்டுகள் கழித்து அதே அக்டோபர் மாதத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை 30 நிமிடங்களில் இஸ்ரேல் மீது ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் இதன்மூலம் அரபு நாடுகள் அனைத்தும் தங்களுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என்பதை ஹமாஸ் உணர்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications