"போரை நிறுத்துங்க.." சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி தீர்ப்பு! ரஷ்யா அப்செட் ஆகுமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து இருக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும், உக்ரைன் மீது ரஷ்யா மேலும் தாக்குதல்களை நடத்த கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் நேற்று நெதர்லாந்தில் நடந்த விசாரணையில் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் அரசு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

Recommended Video

    International Court-ல் Russia-வுக்கு எதிராக வாக்களித்த India..பின்னணி | Oneindia Tamil

    ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் கடந்த 3 வாரங்களுக்கு முன் நாடியது. உக்ரைனில் ரஷ்யா இன அழிப்பு மேற்கொள்வதாகவும், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குவதாகவும், கொத்து குண்டுகளை பயன்படுத்துவதாகவும் உக்ரைன் குற்றஞ்சாட்டி இந்த வழக்கை தொடுத்தது.

    இந்த வழக்கில் 15 நாட்டு நீதிபதி பிரதிநிதிகள் கலந்து கொண்டு வழக்கை விசாரித்தனர். அமெரிக்க நீதிபதி கோவன் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 7ம் தேதி இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது.

    ரஷ்யாவிற்கு எதிராக உத்தரவு

    ரஷ்யாவிற்கு எதிராக உத்தரவு

    இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று முதல்கட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ரஷ்யா உடனே உக்ரைனில் மேற்கொண்டு இருக்கும் ராணுவ ஆபரேஷனை கைவிட வேண்டும். உக்ரைனில் மேற்கொண்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்த கூடாது. போரை கைவிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு சாதகமாக 13 நாடுகள் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவும் தீர்ப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

     இரண்டு நாடுகள்

    இரண்டு நாடுகள்

    ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் தீர்ப்பிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் ரஷ்யா எந்த விதமான வாய் மொழி வாதங்களையும் வைக்கவில்லை. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சில் வழியாக ஒரே ஒரு எழுத்து பூர்வ வாதத்தை மட்டும் வைத்தது. அதில், உக்ரைனில் இருக்கும் புரட்சியாளர்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள். அவர்களை பாதுகாக்க போர் தொடுக்கிறோம் என்று ரஷ்யா கூறியது. ஆனால் இன அழிப்பிற்கு எதிராக போர் தொடுக்க முடியாது என்று சர்வ்தேச நீதிமன்றம் உத்தரவிட்டு நேற்று ரஷ்யாவிற்கு எதிரான உத்தரவை பிறப்பித்தது.

    நீதிபதிகள் விவரம்

    நீதிபதிகள் விவரம்

    நீதிபதி ஜோன் இ டோனோகு (அமெரிக்கா), நீதிபதி பீட்டர் டோம்கா (ஸ்லோவாக்கியா), நீதிபதி ரோனி ஆபிரகாம் (பிரான்ஸ்), நீதிபதி முகமது பென்னோனா (மொராக்கோ), நீதிபதி அப்துல்கவி அகமது யூசுப் (சோமாலியா), நீதிபதி ஜூலியா செபுடிண்டே (உகாண்டா), நீதிபதி தல்வீர் பண்டாரி (இந்தியா), நீதிபதி பேட்ரிக் லிப்டன் ராபின்சன் (ஜமைக்கா), நீதிபதி நவாப் சலாம் (லெபனான்), நீதிபதி இவாசவா யுஜி (ஜப்பான்), நீதிபதி ஜார்ஜ் நோல்டே (ஜெர்மனி), நீதிபதி ஹிலாரி சார்லஸ்வொர்த் (ஆஸ்திரேலியா), நீதிபதி தற்காலிக டவுடெட் ஆகியோர் இந்த தீர்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜனாதிபதி கிரில் கெவோர்ஜியன் (ரஷ்யா) மற்றும் நீதிபதி சூ ஹான்கின் (சீனா) எதிராக வாக்களித்தனர்.

    இந்தியா ஐநா

    இந்தியா ஐநா

    இந்தியா இதுவரை ஐநா சபைகள் அனைத்திலும் நடுநிலை நிலைப்பாட்டை மட்டுமே எடுத்துள்ளது. அதாவது ரஷ்யாவை இந்தியா எதிர்த்தது கிடையாது. ஆதரித்ததும் கிடையாது. அதேபோல் உக்ரைனையும் இந்தியா எதிர்த்ததோ, ஆதரித்ததோ கிடையாது. இந்த நிலையில் முதல்முறையாக ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி தல்வீர் வாக்களித்து இருக்கிறார். ஆனால் இந்தியாவின் இந்த நிலைப்பாடு என்பது ரஷ்யாவிற்கு எதிரானது என்று கூற முடியாது.

    ஏன் இந்த தீர்ப்பு?

    ஏன் இந்த தீர்ப்பு?

    ஏனென்றால் இந்த தீர்ப்பு ரஷ்யாவை கண்டிக்கும் ஒன்று கிடையாது. மற்ற ஐநா தீர்மானங்கள் ரஷ்யாவை கண்டிக்கும் விதமாக அமைந்ததால் அதை இந்தியா புறக்கணித்தது. மாறாக இந்த தீர்ப்பு.. போரை நிறுத்தி அமைதிக்கு வழிவகுக்கும் தீர்ப்பு ஆகும். அதோடு மற்ற ஐநா வாக்குகளை புறக்கணிப்பதை போல இந்த தீர்ப்பை இந்தியா புறக்கணிக்க முடியாது. ஏதாவது ஒரு பக்கம் வாக்களிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் தொடர வேண்டும் என்றும் இந்தியா தீர்ப்பளிக்க முடியாது.

    போர் தொடர கூடாது

    போர் தொடர கூடாது

    போர் தொடர வேண்டும் என்று சீனா, ரஷ்யா போல இந்தியா வாக்களிக்க முடியாது. அது இந்தியாவின் நடுநிலை நிலைப்பாட்டிற்கு எதிராக அமையும். இதனால் போர் நிறுத்த வேண்டும் என்று இந்தியா வாக்களித்துள்ளது. அதோடு இந்த தீர்ப்பு ரஷ்யாவிற்கு எந்த விதமான கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாது. இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு ரஷ்யாவிற்கு எதிராக அழுத்தம் கொடுக்கப்படலாம். ஆனால் அதையும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+