Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போடும் பெரிய பிளான்.. உக்ரைன் நினைத்தே பார்க்காதது.. ரஷ்யாவிற்கே சாதகமா?

Subscribe to Oneindia Tamil

முனிச்: போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு பதிலாக உக்ரைன் மீதே அமெரிக்கா அதிகஅழுத்தம் கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக குற்றச்சாட்டி இருப்பதன் பின்னணி குறித்து வெளியாகி உள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்யா உக்ரைன் போரை எப்படியாவது விரைவில் முடிக்க விரும்புகிறார்கள், அதற்காக உக்ரைனை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார். இது ஐரோப்பா முழுவதுமே கடந்த சில வாரங்களாகவே விவாதத்தில் இருந்து வருகிறது.

உலகின் பல்வேறு சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்த போர் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் தான். கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

Why is America pressuring us instead of Russia Ukrainian President Zelensky explain

அமெரிக்கா நிதி ஒதுக்க மறுப்பு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கொட்டத்தை அடக்க உக்ரைனை ஆயுதம் போல் பயன்படுத்தி வந்த நிலையில், அதிகப்படியான நிதி செலவாகுவதை, அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்தாண்டு பொறுப்பேற்ற டிரம்ப்புக்கு பிடிக்கவில்லை.

போரில் உக்ரைனுக்கு தேவையில்லாமல் அதிக நிதி ஒதுக்கப்படுவதாக கூறி நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக கனிம வளம் நிறைந்த அந்த நாட்டின் சுரங்க உரிமையை கேட்டார். வியாபரியான டிரம்ப், வணிக கண்ணோட்டத்துடனே உக்ரைனை அணுகியது பேசு பொருளானது. இத்தனை நாட்களாக ஆதரித்து வந்த அமெரிக்காவே இப்படி பேசுகிறதே என்று உக்ரைன் ஆடிப்போனது.

சமரசம் சாதகமாக இல்லை

அத்துடன் முடியவில்லை பிரச்சனை.. போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் தலைமையிலான குழு தற்போது சமரசம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில் போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை அபுதாபியில் நடந்தது. இதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. அதற்கு காரணம் ரஷ்யாவிடம் உக்ரைன் பல சமரசங்களை செய்யவேண்டியதிருந்தது. இதனை உக்ரைன் ஏற்க மறுத்தது.

இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்துக்கான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள்.

உக்ரைனுக்கு அழுத்தம்

இதற்கிடையே ஜெர்மனியின் முனிச் நகரில் சர்வதேச பாதுகாப்புத்துறை மாநாடு நடந்து வருகிறது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் பேசியபோது உக்ரைன் மீது அதிக தளர்வு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அமெரிக்கா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி பேசினார்.

சம்மதிக்க வைக்க முடியவில்லை

அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. போரை நிறுத்துவதற்கான அனைத்து வல்லமையும் டிரம்பிடம் உள்ளன. ஆனால் டிரம்ப் புதினை சம்மதிக்க வைத்ததாக தெரியவில்லை. தாக்குதல் இலக்குகள் மாற்றப்பட்டுள்ளதே தவிர நிறுத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

உக்ரைனுக்காக பேச யாருமே இல்லை

"அமைதி ஒப்பந்தத்தை ஏற்க அதிக அழுத்தத்திற்கு உக்ரைன் உள்ளாக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் தளர்ந்து போக வேண்டும், ரஷ்யாவுடன் பணிந்து போக வேண்டும் என்ற வகையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளை இணைக்காதது உக்ரைனுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. பேச்சுவார்த்தையில் எங்களுக்கு ஆதரவாக பேச ஒருவரும் இல்லாமல் இருக்கிறோம்" இவ்வாறு கூறினார்.


அமெரிக்காவின் திட்டம் என்ன

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுவது ஓரளவு உண்மை தான்.. ஏனெனில் ரஷ்யா, அமெரிக்கா உக்ரைன் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. இதில் ரஷ்யாவிற்கு ஆதரவாக அமெரிக்கா பேசுவதாக உக்ரைன் நினைக்கிறது. டிரம்ப் போரை விரைவில் முடிக்க விரும்புவதும், அதற்காக உக்ரைனை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்துவதும் பேசுபொருளாக உள்ளது.ரஷ்யா பிடித்துள்ள சில பகுதிகளை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அமைதி ஒப்பந்தம் செய்ய உக்ரைனை அமெரிக்கா வற்புறுத்துகிறதாம். இப்படி பேச்சுவார்த்தை நடத்தி போரை முடித்து வைப்பதற்ககு பலனாக உக்ரைனின் கனிம வளம் நிறைந்த சுரங்க உரிமைகளை அமெரிக்கா கேட்கிறதாம்.

உண்மை என்ன

இறுதியாக உண்மை இதுதான்.. அமெரிக்கா தனது பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் போரை உடனே நிறுத்த விரும்புகிறது. ஆனால் உக்ரைனோ, தங்கள் நிலத்தை மீட்டெடுக்காமல் அல்லது தங்களுக்குச் சாதகமான சூழல் அமையாமல் போரை நிறுத்தினால் அது ரஷ்யாவிற்குத்தான் வெற்றியாக அமையும் என்று கருதுகிறது. இதுதான் இருவருக்கும் இடையிலான தற்போதைய மோதலுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் சர்வதேச ஊடக நிபுணர்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+