Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசாவின் "இதய" பகுதியில் கை வைக்கும் இஸ்ரேல்.. மொத்தமாக திணறும் ஹமாஸ் படை.. அவ்வளவு தான் போலயே

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்போது இஸ்ரேல் போரின் அடுத்தக் கட்டத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த அக். 7ஆம் தேதி மிக மோசமான தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், பலரை பிணைய கைதிகளைகவும் ஹமாஸ் பிடித்துச் சென்றது.

Why Israel forces started operating in heart of Gaza City

இதையடுத்து பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்த இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், பிறகு மெல்ல படையெடுப்பையும் ஆரம்பித்தது. ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இந்த இஸ்ரேல் காசா மோதல் இப்போது அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இப்போது காசா நகரில் பல முக்கிய இடங்களை குறிவைத்து அங்குள்ள ஹமாஸ் படைகளை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அங்குள்ள பதுங்கு குழிக்குள் இருக்கலாம் என கூறப்படும் நிலையில், அதை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக காசா நகரின் இதய பகுதியை நோக்கி இஸ்ரேல் முன்னேறி வருகிறது. ஹமாஸ் குழு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் சுற்றி வளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோசவ் கல்லன்ட் தெரிவித்துள்ளார். இதனால் காசா நகரில் இப்போது பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்போது காசா நகரில் இறங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம் மற்றும் பீரங்கிகளுக்கு ஒரே டார்கெட் தான்.. அதாவது காசாவில் இருக்கும் அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளையும் அவர்களின் உள்கட்டமைப்பு, அவர்களின் தளபதிகள், பதுங்கு குழிகள், தகவல் தொடர்பு அறைகள் தேடி அழிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸின் மூத்த தலைவரான யாஹ்யா சின்வார் பதுங்கு குழியில் தனியாக உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதே சின்வார் தான் கடந்த மாதம் இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர் என்று அமைச்சர் யோசவ் கல்லன்ட் தெரிவித்துள்ளார். அவர் இப்போது தனிமையில் உள்ளதாகவும் அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்தார். அதேநேரம் சின்வார் இப்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து ஹமாஸ் தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Why Israel forces started operating in heart of Gaza City

காசாவின் முக்கிய இடங்கள், அதாவது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கீழ் தொலைவுக்கு சுரங்கப்பாதைகள் உள்ளன. ஆயுதக் கிடங்குகள், தகவல் தொடர்பு அறைகள் மற்றும் போராளிகளுக்கான மறைவிடங்கள் என அனைத்தையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதைகளை அமைத்துள்ளன. அதையெல்லாம் குறிவைத்து இஸ்ரேல் இப்போது போரின் அடுத்த கட்டத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஹமாஸ் வசம் மிக பெரிய சுரங்கப் பாதை நெட்ஓர்க் இருக்கிறது. அதை முற்றிலுமாக அழிக்க பல மாதங்கள் வரை ஆகும். அந்தளவுக்கு ஹமாஸ் வசம் நீண்ட சுரங்கப் பாதை இருக்கிறது. இது இஸ்ரேலுக்கும் தெரியும்.. இதன் காரணமாகவே இஸ்ரேல் தொடர்ச்சியாக நீண்ட போருக்கு தயாராக வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+