சீனாவுக்கு பச்சை ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்! விமானத்தை விட 'ஸ்லோ ரயிலில்' பயணிக்க விரும்புவது ஏன்?
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், விமான பயணத்தை விட ரயில் பயணத்தை விரும்புவது ஏன் தெரியுமா? 'நகரும் கோட்டை' என அழைக்கப்படும் ரயிலில் உள்ள சொகுசு அம்சங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் சொந்தமாக ஹெலிகாப்டர் இருந்தும் சீனாவுக்கு கிம், ரயிலில் போனது ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொதுவெளியில் தோன்றாததால் அவர் இறந்துவிட்டதாக பலர் தகவல்களை பரப்பினர். ஆனால் கிம், கெத்தாக வந்து "திரும்பி வந்துட்டேன்"னு சொன்னார். அவ்வப்போது கிம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவரும்.

சீனா சென்ற கிம்
இந்த நிலையில் சீனாவின் இரண்டாம் உலகப்போர் முடிவை கொண்டாடும் அணிவகுப்பில் கலந்து கொள்ள சீனாவுக்கு தனது மகளுடன் கிம், பிரத்யேக ரயிலில் சென்றிருந்தார். ரஷ்யா, சீனா என எந்த இடங்களுக்கு பயணம் செய்தாலும் ஹெலிகாப்டரை விட கிம், இந்த பச்சை நிற ரயிலிலேயே பயணம் செய்கிறாராம்.
தனி விமானம்
தன்னிடம் தனி விமானம் இருந்து இந்த ரயில் பயணத்தை அவர் ஏன் தேர்வு செய்கிறார் என்பதை பார்க்கலாம். இந்த ரயிலை 'நகரும் கோட்டை' என்றும் 'தி சன் டிரெயின்' என்றும் அழைக்கிறார்கள். கிம் குறித்து எந்த தகவல்களும் அவரது நாட்டு எல்லையை தாண்டி வெளியே வராது. அந்த அளவுக்கு அவரது ரகசியங்கள் காக்கப்படும்.
முக்கிய அம்சம்
அவரை பொருத்தமட்டில் பாதுகாப்பை முக்கிய அம்சமாக கருதுகிறார். நீண்ட நேரமானாலும் ரயில் பயணத்தையே விரும்புகிறார். இதற்கு முதல் காரணமாக பாரம்பரியம் என சொல்லப்படுகிறது.
கிம் தாத்தா
அதாவது கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல், தாத்தா கிம் இல் சங் ஆகியோர் விமானங்களில் பயணிக்க அச்சமடைந்ததாக சொல்லப்படுகிறது. தங்கள் நாட்டு விமானங்களின் சோதனை ஓட்டத்தின் போது ஜெட் விமானம் வெடித்ததால் கிம்மின் தாத்தாவும் அப்பாவும் விமான பயணத்தை மேற்கொள்ள அஞ்சினர்.
ரஷ்ய அதிபர் புடின்
கடந்த 2001 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க சுமார் 19 ஆயிரம் கிலோ மீட்ட தூரம் செல்ல கிம் ஜாங் இல் (கிம்மின் தந்தை), 10 நாட்களுக்கும் மேல் ரயிலில் பயணம் செய்தார். ஆனால் கிம் ஜாங் உன் சுவிட்சர்லாந்தி பள்ளி படித்த போதே விமானத்தில் பறந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு விமானம் குறித்த அச்சமில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றதும், 2018ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க விமான பயணத்தை தேர்வு செய்திருந்தார்.
டிரம்புடன் சந்திப்பு
2019ஆம் ஆண்டு டிரம்பை இரண்டாவது முறையாக சந்தித்தபோது ரயில் பயணத்தை கிம் மேற்கொண்டார். இந்த ரயில் 'நகரும் கோட்டை' என அழைக்கப்பட காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குண்டு துளைக்காது
இந்த ரயில் குண்டு துளைக்காது. ரயிலில் மருத்துவக் குழுவினர், பணியாட்கள், ஆயுதமேந்திர பாதுகாப்பு படையினர், ஆயுதங்கள் இருக்கின்றனவாம். இந்த ரயில் 90 பெட்டிகள் கொண்டது. ரயில் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாது.
வசதிகள்
ரயிலில் படுக்கை அறை, சமையலறை, சைனீஸ், ஜப்பானீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு உணவுகள் எப்போதும் கிடைக்கும் வகையில் செஃப்கள் இருக்கிறார்கள். ரயிலில் ஆலோசனை நடத்தும் அறையும் இருக்கிறதாம். விமானத்தை விட இந்த ரயில் பாதுகாப்பனது என்கிறார்கள். இந்த ரயிலில் தனது காரையும் கொண்டு செல்கிறார். தேவையான நேரங்களில் காரில் பயணிக்கிறார். பல முறை நாட்டு மக்களுக்கு ரயிலில் இருந்தபடியே உரையாற்றியுள்ளார். வடகொரியாவிலிருந்து சீனாவுக்கு 1,352 கி.மீ. தூரம். விமானத்தில் சென்றால் 2 மணி நேரமாகும். ரயிலில் 5 மணி நேரமாகும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications