போப் பிரான்சிஸ் சவப்பெட்டியில் என்னென்ன இருக்கும்? 3க்கு பதில் ஒரே சவப்பெட்டியில் அடக்கம் ஏன்?
ரோம்: போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி காலமானார். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான இறுதி ஊர்வலம் தொடங்கி நடந்து வருகிறது. பொதுவாக போப்பாண்டவராக இருந்தவரின் உடல்கள் 3 சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்படும். ஆனால் இந்த பாரம்பரியத்தை மீறி இன்று போப் பிரான்சிஸ் உடல் அடக்கத்துக்கு ஒரெயொரு சவப்பெட்டி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது? அது ஏன்? அவரது சவப்பெட்டியின் உள்ளே வைக்கப்படும் பொருட்கள் குறித்த விபரம் வருமாறு:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார். கடும் நுரையீரல் பாதிப்பு மற்றும் நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். கடந்த பிப்ரவரியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் தான்
கடந்த 21ம் தேதி அவர் காலமானார். அவருக்கு வயது 88.
போப் பிரான்சிஸ் உடலுக்கு கடந்த 5 நாட்களாக பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதி சடங்கு நடந்தது. இன்று இறுதி ஊர்வலம் தொடங்கியது. வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் ஆண்டவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், கிறிஸ்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார்.
இந்தியா சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அஞ்சலி செலுத்தினர். இன்னும் சற்று நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தான் வழக்கமாக பின்பற்றப்படும் பாரம்பரிய முறை என்பது போப் பிரான்சிஸ் அடக்கத்தில் பின்பற்றப்படவில்லை. அதாவது பொதுவாக போப் ஒருவர் மறைந்தால் அவரது உடல் 3 சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்யப்படும். இந்த பெட்டிகளில் ஒன்று ஊசி இலை மரத்தாலும், இன்னொரு பெட்டி எஃகுவாலும், மற்றொரு சவப்பெட்டி ஓக் மரத்தாலும் செய்யப்பட்டு இருக்கும். இந்த சவப்பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று இடம்பெற்றிருக்கும். ஆனால் போப் பிரான்சிஸ் உடல் வழக்கத்துக்கு மாறாக ஒரெயாரு சவப்பெட்டியில் தான் வைக்கப்பட்டு அவரது இறுதி ஊர்வலம் என்பது தொடங்கி உள்ளது.
இந்த திடீர் மாற்றத்தின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது போப் பிரான்சிஸ் தனது இறுதிசடங்கை எளிமையாக நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி தனது உடல் ஒரேயொரு மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான் பாரம்பரிய முறை கைவிடப்பட்டு ஒரேயொரு சவப்பெட்டியில் வைத்து உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது சவப்பெட்டியில் பல்வேறு பொருட்கள் வைக்கப்படும். போப் பிரான்சிஸ் பதவிக்காலத்தில் அச்சிடப்பட்ட நாணயங்கள், போப்பாக இருந்த காலத்தில் அவர் சந்தித்த விஷயங்களை சுருக்கமாக கூறும் பத்திரம் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருக்கும். மேலும் போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் கைத்தட்டினர். நம் நாட்டை பொறுத்தவரை இறுதி ஊர்வலத்தில் கைத்தட்டும் வழக்கம் இல்லை. ஆனால் அங்கு உள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் கைத்தட்டினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications