Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.. எப்போதும் வியாழக்கிழமை சாப்பிட மாட்டாராம். ஏன் தெரியுமா.. ஷாக் ஆவீங்க

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். இதனிடையே அவரை பற்றி அவரது மாமியார் சுதா மூர்த்தி கூறிய சில தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கடந்தாண்டு பிரிட்டனுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்றே சொல்லலாம். ஒரு பக்கம் ராணி எலிசபெத் மறைவு மற்றொரு பக்கம் வரிசையாக ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் அந்நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

 Why Rishi Sunak wont eat in thursday explains mother in law Sudha Murthy

அது மட்டுமின்றி அங்கே விலைவாசியும் உச்சம் தொட்டது. இதனால் அங்குள்ள நடுத்தர வர்க்கத்தினரும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனால் பிரிட்டன் இக்கட்டான ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டது.

பிரிட்டன்: அங்கே கடந்தாண்டு தொடக்கத்தில் பிரதமராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். அங்கே 2019ஆம் ஆண்டு முதலே போரீஸ் ஜான்சன் தான் பிரதமர் பதவியில் இருந்தார். இருப்பினும், கொரோனா காலத்தில் அரச குடும்பம் தொடங்கி அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்த சமயத்தில் இவர் தனது சகாக்களுக்கு பார்ட்டி வைத்தது பெரிய சர்ச்சையானது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.

இதனால் கடும் அழுத்தம் ஏற்பட்ட நிலையில், அவர் பதவி விலகினார். இதற்கு அடுத்து லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வானார். ராணி எலிசபெத் கடைசியாக நியமித்த பிரதமர் இவர் தான். ஆனால், இவரால் வெறும் 50 நாட்கள் மட்டுமே பிரதமராக இருக்க முடிந்தது. அதற்குள் அவர் பல்வேறு அழுத்தங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அப்போது லிஸ் டிரஸ் எடுத்த சில முடிவுகள் பிரிட்டன் பொருளாதாரம் மேலும் மோசமாக காரணமாக அமைந்தது. இதனால் அவரும் பதவிக்கு வந்து 7 வாரங்களில் ராஜினாமா செய்தார்.

 Why Rishi Sunak wont eat in thursday explains mother in law Sudha Murthy

ரிஷி சுனக்: பிரிட்டன் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே பிரதமர் பதவியில் இருப்பார். லிஸ் டிரஸ் ராஜினாமாவைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது. இதில் தொடக்கத்திலேயே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு 140 எம்பிக்களின் ஆதரவு கிடைத்தது. அங்கே போட்டியிடவே 100 எம்பிக்களின் ஆதரவு தேவை. அவரைத் தவிர யாருக்கும் 100 எம்பிக்களின் ஆதரவு இல்லை என்ற நிலையில், அவர் போட்டியின்றி பிரிட்டன் பிரதமராகத் தேர்வானார்.

அதைத் தொடர்ந்து மன்னர் சார்லஸ் பிரதமராக ரிஷி சுனக்கை கடந்தாண்டு நியமித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். மேலும், ரிஷி சுனக் பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தார். பிரிட்டனில் டாப் பதவிக்கு வந்த முதல் இந்து, இளம் வயது பிரதமர் என்று பல சிறப்புகளைப் பெற்றிருந்தார். பொதுவாகத் தேர்தலில் வென்று பிரதமர் ஆனால் தங்களை நிரூபிக்க ஓரளவுக்குக் காலம் இருக்கும்.

இக்கட்டான சூழல்: ஆனால், ரிஷி சுனக்கிற்கு அப்படி காலம் கிடைக்கவில்லை. பொருளாதாரம் இக்கட்டான ஒரு சூழலில் இருந்ததால் அதை உடனடியாக மீட்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இதற்காக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவரது செயல்பாடுகளால் பிரிட்டன் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் இருந்து மெல்ல மீண்டது.

இதற்கிடையே ரிஷி சுனக் குறித்து அவரது மாமியார் சுதா மூர்த்தி சில முக்கிய கருத்துகளைச் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்போசிஸ் நாராயண மூர்த்தி- சுதா மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி தான் ரிஷி சுனக்கின் மனைவி. கல்லூரியில் படிக்கும் போது அவர்களுக்குக் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் இடையேயான திருமணம் கூட பெங்களூரில் தான் நடந்தது. இதன் மூலம் அக்ஷதா மூர்த்திக்கும் இன்னும் இன்போசிஸில் குறிப்பிட்ட அளவுக்குப் பங்குகள் இருக்கிறது.

 Why Rishi Sunak wont eat in thursday explains mother in law Sudha Murthy

சுதா மூர்த்தி: இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுதா மூர்த்தி தனது கணவர் குறித்தும் மருமகன் குறித்தும் கூறிய சில கருத்துகள் இணையத்தில் டிரெண்டானது. அதில், "எனது கணவரை நான் தொழிலதிபர் ஆக்கினேன். இப்போது எனது மகள் (அக்ஷதா மூர்த்தி) அவரது கணவரைப் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆக்கியுள்ளார். மனைவியின் மகிமையே இதற்குக் காரணம்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ரிஷி சுனக் எம்பியாக தேர்வான 7 ஆண்டுகளில் பிரதமராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய சுதா மூர்த்தி, "கடந்த 150 ஆண்டுகளாக ரிஷி சுனக் இங்கிலாந்தில் இருந்தாலும், அவர் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறார். மேலும், நாங்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வியாழக்கிழமை தான் தொடங்குவோம். இன்போசிஸ் நிறுவனத்தைக் கூட வியாழக்கிழமை தான் ஆரம்பித்தோம். அக்ஷாதா- ரிஷி சுனக் திருமணம் சமயத்தில் கூட ரிஷி சுனக் இது குறித்துக் கேட்டார்.

நாங்கள் ராகவேந்திரா சுவாமிக்காக வியாழக்கிழமை விரதம் இருப்போம். அனைத்து நல்ல காரியங்களையும் வியாழனில் ஆரம்பிப்போம் என்றேன். அப்போது முதல் அவரும் அதைப் பின்பற்றுகிறார். எங்கள் மருமகனின் (ரிஷி சுனக்) அம்மா திங்கட்கிழமை விரதம் இருப்பார், ஆனால் எங்கள் மருமகன் ரிஷி சுனக் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பார்" என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+