60 ஆண்டுக்கு பின் மீண்டும் "போர்.." இப்படியொரு நிலைமை ஏற்படும்னு யாரும் நினைக்கல! திணறும் தென்கொரியா
சியோல்: கொரோனாவுக்கு பிறகு தென்கொரியா இப்போது மிக முக்கிய பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. இது தென் கொரியாவை முடக்கிப் போடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு தென்கொரியா.. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி தான். இதன் அண்டை நாடான வடகொரியா சர்வாதிகாரத்தின் பிடியில், சிக்கித் தவிக்கும் நிலையில், தென் கொரியா டெக்னாலஜியில் வேற லெவலில் இருக்கிறது.

பல நவீனத் தொழில்நுட்பங்கள் தென் கொரியாவை ஆக்கிரமித்து வருகிறது. இப்படி நவீனத்தை நோக்கி முன்னேறி வரும் தென்கொரியா இப்போது வினோதமான மற்றும் சிக்கலான பிரச்சினையைச் சந்தித்து வருகிறது.
தென் கொரியா: கொரோனா காலத்தில் அனைத்து நாடுகளிலும் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கொரோனாவுக்கு பின்னர் பல உலக நாடுகளில் சுற்றுலா அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்கொரியாவில் சமீப ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் மறுபுறம் தென்கொரியா மற்றொரு சிக்கலையும் எதிர்கொண்டுள்ளது.
அதாவது தென் கொரியாவில் பல இடங்களில் இப்போது மூட்டைப்பூச்சி பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளைத் தவிர்க்க உள்ளூர்வாசிகள் பொது போக்குவரத்து மற்றும் சினிமாக்களைத் தவிர்க்குமாறு தென்கொரிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளில் மூட்டைப்பூச்சி பிரச்சினை அதிகமாக இருக்கும் நிலையில், அங்கிருந்து வரும் பணிகள் தங்கள் உடைமைகள் கிருமி நீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூட்டைப்பூச்சி பிரச்சினை: வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மூட்டைப் பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நாடு திரும்பியதும் தங்கள் அனைத்து பயண உபகரணங்களை முழுமையாகக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்று தென்கொரியா நோய் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு இடத்தில் இருக்கும் மூட்டை பூச்சி மற்ற இடங்களிலும் பரவாமல் இருக்கவே தென்கொரிய அரசு இப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதற்காக நான்கு வாரங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தென்கொரிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மூட்டைப்பூச்சி அதிகமாக இருக்கும் பாத் ரூம்கள், ஹோட்டல்கள், குழந்தை பராமரிப்பு மையங்களில் ஆய்வு நடத்தி, அங்கே பூச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பூச்சிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் உடனடியாக கிருமி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்படுத்தவே முடியல: கடந்த நவ. 7ஆம் தேதி வரை தென் கொரியாவில் 30 இடங்களில் மூட்டைப்பூச்சி பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. தென் கொரியாவில் 1960களில் இந்த மூட்டைப்பூச்சி பிரச்சினை கட்டுப்படுத்தவே முடியாத பிரச்சினையாக இருந்தது. பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகே மூட்டைப்பூச்சி பிரச்சினை சரி செய்யப்பட்டது. இப்போது சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூட்டைப்பூச்சி பிரச்சினை தலைவிரித்து ஆட தொடங்கியுள்ளது.
அலட்சியம் வேண்டாம்: இப்போது 30 கேஸ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே அதிகாரிகள் கூறுகிறார்கள். மூட்டைப்பூச்சி பிரச்சினை தானே என இதை அலட்சியமாக நினைக்க முடியாது. ஏனென்றால் இது மிக விரைவாக நாடு முழுக்க பரவும் ஆபத்து இருக்கிறது.
அப்படி இது நாடு முழுக்க பரவினால், அது தென்கொரியாவை மொத்தமாக முடக்கிப் போடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே தென்கொரியா இந்த மூட்டப்பூச்சிகளை ஒழிக்கப் போர்க் கால நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications