நெருங்கும் காதலர் தினம்.. 9.5 கோடி காண்டம்களை இளசுகளுக்கு இலவசமாக தரும் தாய்லாந்து! அலைமோதும் கூட்டம்
இலவசமாக காண்டம்களை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
பாங்காக்: காதலர் தினம் நெருங்கும் நிலையில், நாடு முழுக்க உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு 9.5 கோடி காண்டம்களை இலவசமாக வழங்கத் தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
வரும் பிப். 14ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இப்போது தான் காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அவ்வளவு தூரம் கொண்டாட்டம் இருக்காது.
அதேநேரம் பல மேற்குலக நாடுகளிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதேபோல ஐரோப்பிய நாடுகளிலும் காதலர் தின கொண்டாட்டம் மிக சிறப்பாகவே இருக்கும்.

காதலர் தினம்
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாகக் காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடான தாய்லாந்தில் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். மொத்தம் 7.16 கோடி மக்களைக் கொண்ட தாய்லாந்தில் காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் டாப் சாய்ஸாக தாய்லாந்து உள்ளது.

தாய்லாந்து
இப்படி பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் குவிந்து வருவதாலும் அங்குக் காதலர் தின கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும். இதனிடையே காதலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இலவசமாகக் காண்டம் கொடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உடலுறவால் பரவும் STDs நோய்களைத் தடுக்கவும், டீன் ஏஜ் கர்ப்பத்தைத் தடுக்கும் நோக்கத்திலும் காண்டங்களை இலவசமாகத் தரத் தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

9.5 கோடி காண்டம்கள்
பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலும் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி தாய்லாந்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு சுமார் 9.5 கோடி காண்டம்களை தரத் தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் போன்ற கருத்தடை தொடர்பான பொருட்களின் விற்பனை மற்ற நாட்களை விடக் காதலர் தினத்தன்று தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் முற்போக்கான ஒரு அணுகுமுறையையே தாய்லாந்து அரசு கடைப்பிடிக்கிறது.

வாரம் 10 காண்டம்கள்
தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகள் பல நாடுகள் பிற்போக்குத்தனமான நடவடிக்கையே எடுத்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறான நடவடிக்கையில் தாய்லாந்து இறங்கியுள்ளது. இம்மாத தொடக்கம் முதல் இத்திட்டத்தின் கீழ் அங்குள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வாரத்திற்கு 10 ஆணுறைகள் வழங்கப்படும். காதலர் தினத்தன்று மட்டுமின்றி அடுத்து ஓராண்டு முழுவதும் வாரம் 10 ஆணுறைகளை வழங்கத் தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

சுகாதார அதிகாரி
இது குறித்து அந்நாட்டின் சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், "உடலுறவின் போது பரவும் நோய்களைத் தடுக்கவும் இளம் வயது கர்ப்பத்தைத் தடுக்கவும் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். மொத்தம் 4 சைஸ்களில் இலவச ஆணுறைகள் கிடைக்கும் என்றும் இதை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் இந்த இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதற்காக
பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக சிபிலிஸ், எய்ட்ஸ், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கோனோரியா மற்றும் கிளமிடியா உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது. இதைத் தடுக்கவே தாய்லாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில், தாய்லாந்தில் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் அவர்களில் பெரும்பாலானோருக்கு சிபிலிஸ் மற்றும் கோனோரியா பாதிப்பே இருந்தது. தொடர்ந்து சில ஆண்டுகளாக பாலியல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்து அரசு அதைத் தடுக்க இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தாய்லாந்து பெண்கள்
தாய்லாந்து அரசு எடுத்த சர்வேக்களின் படி 15 முதல் 24 வயது வரை உள்ள பெண்களே எஸ்.டி.டி போன்ற பாலியல் நோயால் பாதிக்கப்பட அதிக ஆபத்து உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அங்கு 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 1,000இல் 24.4 பேர் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். இந்த இரண்டும் பெண்கள் உடல்நலத்திற்கு ஆபத்து என்பதாலேயே இந்த நடவடிக்கையில் தாய்லாந்து அரசு இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications