காசாவுக்குள் இறங்கிய அமெரிக்க டிரோன்கள்.. இது மேட்டரே வேறயாம்.. உற்று பார்க்கும் இஸ்ரேல்.. பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், திடீரென அமெரிக்கா டிரோன்கள் காசாவில் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த அக். 7ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதன் பிறகு இஸ்ரேல் நாட்டிற்குள் வந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், பலரைப் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றன.

 Why US drones are flying in Gaza as Hamas is not releasing hostages

அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா மீது முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், இப்போது மெல்ல முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பிணையக் கைதிகள்: கடந்த அக். 7ஆம் தேதி நடந்த இந்த கொடூரமான தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பலரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்ட போதிலும், பலர் இன்னும் பலர் ஹமாஸ் வசம் தான் இருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும், பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் வரிசையாகப் பல கோரிக்கைகளை வைக்கிறது.

இதற்கிடையே பிணையக் கைதிகள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய காசாவுக்குள் அமெரிக்கா தனது ஆளில்லா டிரோன் விமானங்களை அனுப்பி உள்ளது. பிணையக் கைதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து இஸ்ரேலுக்கு உதவ காசாவுக்கு உளவு சேகரிக்கும் ஆளில்லா டிரோன் விமானங்களை அமெரிக்கா அனுப்பி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே இப்படி டிரோன்களை அனுப்பி ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அந்த 10 பேர் எங்கே: இந்த பிணையக் கைதிகளின் ஹமாஸின் சுரங்கப்பாதை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. மொத்தம் 200க்கும் மேற்பட்ட பிணையக் கைதிகள் ஹமாஸ் வசம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களில் 10 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கவே அமெரிக்கா இந்த டிரோன்களை அனுப்பி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேல் படைகள் இன்று காசா நகரைச் சுற்றி வைத்துள்ளது. ஹமாஸ் படைகளைச் சுற்றி வளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்கு பகுதியில் ஹமாஸ் படைகள் அதிகம் இருப்பதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேல் அதைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

 Why US drones are flying in Gaza as Hamas is not releasing hostages

மோசமான தாக்குதல்: ஹமாஸ் படை கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1,400 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். அதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் காசா மீது இஸ்ரேல் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல நாட்களாக இந்தத் தாக்குதல் தொடர்ந்தது இதில் காசாவில் வசிக்கும் 9,061 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமை இருந்தாலும் கூட இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு உலக நாடுகளும் முயல்கின்றன. இருப்பினும், தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்த்தால் இந்தப் போர் மாதக் கணக்கில் தொடர வாய்ப்புள்ளது போலவே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+