குளிர்கால ஒலிம்பிக் போட்டி நெருங்கும் நேரத்தில் சீனாவிற்கு சிக்கல்.. கிடுகிடுவென உயரும் கொரோனா!
பீஜிங் : சீனாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், திடீரென பீஜிங்கில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
2019ம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து, உலக நாடுகளில் அதிவேகமாக பரவியது கொரோனா.
யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தியது கொரோனா. ஒட்டுமொத்த உலகமுமே லாக்டவுனில் சென்றது. இரண்டாவது அலையில், உருமாறிய கொரோனாவான டெல்டா வைரஸால் ஏகப்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்தது. ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மருத்துவமனைகளுக்கு வெளியே பலர் உயிரிழந்தனர்.

ஒமிக்ரான்
கடந்த சில மாதங்களாக உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரானால் அதிக பாதிப்ப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், உலக அளவில் பரவலாக ஒமிக்ரானின் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஒமிக்ரானின் புது வேரியண்ட் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டெல்த் ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அது ஆர்டி-பிசிஆர் சோதனையிலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

சீனா
இன்னும் பத்து நாட்களில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில், பீஜிங் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 2022 பீஜிங் ஒலிம்பிக் குளிர்கால போட்டியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பயோ பபுளில் இருந்தும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் சீனா மாத ஊரடங்கு திட்டத்தை ஒவ்வொரு நகரிலும் தொடங்கியிருக்கிறது.

கொரோனா
பீஜிங்கில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று நோய்க்கான அதிக ஆபத்து இருப்பதால், மக்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று பீஜிங் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே பெங்டாய் மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 20 லட்சம் பேர் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அரசு உத்தரவிட்டு, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
Recommended Video

ஒலிம்பிக்
இதனிடையே ஒலிம்பிக் போட்டிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து பீஜிங் வந்துள்ள தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளில் 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சீனாவின் வடக்கு நகரமான சியானில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஒரு மாத கால ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications