திகில் படத்தைப் பார்த்து தோழியை சரமாரியாக கத்தியால் குத்திய 12 வயது சிறுமிகள்...
மில்வாக்கி: அமெரிக்காவில், விஸ்கான்சினை சேர்ந்த இரண்டு 12 வயது சிறுமிகள், தங்களது பள்ளித் தோழியையே கத்தியால் தாக்கிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த திங்களன்று அவர்கள் இருவரும் இணைந்து, அச்சிறுமியை ஒரு புதர்ப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கிட்டதட்ட 19 முறை கத்தியால் குத்தியுள்ளனர்.
ஒரு பயங்கராமான இணையதளத்தை பார்வையிட்டதன் விளைவாக இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பலமான தாக்குதல்:
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கால்கள், தோள்பட்டை மற்றும் முக்கியமான பகுதிகளில் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.

உயிர் பிழைத்த சிறுமி:
சைக்கிளில் சென்ற ஒருவர், அச்சிறுமியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.தற்போது அவர் உயிருடன் உள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு பதிவு:
தாக்குதல் நடத்திய இரண்டு சிறுமிகளும், கொலை செய்யும் உள்நோக்கத்துடன் இச்செயலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 சென்டிமீட்டர் கத்தி:
மேலும், 13 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தி ஒன்று, கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிறுமியின் கைப்பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தாக்குதலுக்கு இந்த கத்தி உபயோகிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தின் விளைவு:
பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒரு சிறுமி பயங்கர திரில் கதைகளில் நாட்டமுள்ளவர்.அதன் விளைவாக கொலை செய்து பார்க்க ஆசைப்பட்ட அவர், மற்றொரு சிறுமியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் செயல்:
"நல்லவேளை கடவுள் கிருபையால் பாதிக்கப்பட்ட சிறுமி தப்பிவிட்டார்" என்று காவல்துறை உயர் அதிகாரி ருஸல் ஜாக் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நல்லவேளை தப்பிச்சோம்:
நல்லவேளை தமிழ்நாட்டில் பெண்கள் மிஞ்சிப்போனால் அதிகபட்சமாக குடுமிப்பிடி சண்டை அளவிற்குதான் "வன்முறை" யை கையாளுவார்கள் என்பது ஆறுதலான விஷயம்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications