சூனியக்காரி சாயலில் இருந்த பிரேசில் பெண் அடித்துக் கொலை... பேஸ்புக் போட்டோவால் விபரீதம்
ரியோ டி ஜெனிரோ: பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரியை போன்ற முகச்சாயலில் இருந்ததால் பிரேசிலில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்த பேபினோ மரியா (33) என்ற பெண் மீது குழந்தைகளை கடத்துகிறார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவர் சூனியக்காரி என சந்தேகித்த அக்கம்பக்கத்தார், கடந்த வாரம் கும்பலாகச் சென்று மரியாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியான ஒரு படத்தில் ‘இவர் சூனியக்காரி குழந்தைகளை கடத்துபவர் எச்சரிக்கையாக இருங்கள்' எனக் கூறப்பட்டு இருந்துள்ளது. அப்படத்தில் இருந்த பெண்ணின் முகம் மரியாவின் உருவத்தை ஒத்து இருந்ததால் சந்தேகத்தின் பேரில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், மரியாவின் மீது குற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு தங்கள் தளத்தில் வெளியிட்ட தகவல் காரணம் அல்ல என பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications