வேலையே போச்சு.. இளம்பெண் டைப் செய்த ராஜினாமா கடிதத்தை ‛என்டரை’ தட்டி அலுவலகத்துக்கு அனுப்பிய பூனை
பெய்ஜிங்: சீனாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் பூனைகளை பராமரிக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா கடிதத்தை லேப்டாப்பில் ‛டைப்' செய்து மனம்மாறி அனுப்பாமல் வைத்தார். ஆனால் அந்த கடிதத்தை அவர் வளர்த்த பூனை பாஸுக்கு அனுப்பி வைத்தது. இதனால் அந்த இளம்பெண் தனது பணியை பறிகொடுத்துள்ளார்.
சீனாவின் சோங்கிங் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர். இதனால் வீட்டில் 9 பூனைகளை வளர்த்து வருகிறார்.

இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை பளுவால் தான் ஆசையாக வளர்த்து வரும் பூனைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று நினைத்தார். இதனால் அவர் தனது பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் தனது லேப்டாப்பில் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை டைப் செய்தார். அதோடு அந்த கடிதத்தை அலுவலக பாஸுக்கு அனுப்ப முடிவு செய்து அவர்களின் இ-மெயில் முகவரியையும் தேர்வு செய்து வைத்திருந்தார். இந்த சமயத்தில் அவரது மனம் திடீரென்று மாறியது.
அதாவது பூனைகள் மீது பாசம் காட்ட பணியை ராஜினாமா செய்தால் வாழ்வதற்கான செலவுக்கு என்ன செய்வது? என்று நினைத்தார். இதனால் அவர் அந்த ராஜினாமா கடிதத்ததை அனுப்பாமல் அப்படியே வைத்துவிட்டார். அதேபோல் லேப்டாப்பையும் அவர் ஆஃப் செய்யவில்லை. அப்போது திடீரென்று அவர் வளர்க்கும் பூனை ஒன்று மடிக்கணினி அருகே சென்று ‛என்டர்' பட்டனை அழுத்தி உள்ளது.
இதனால் அவரது ராஜினாமா கடிதம் அவர் பணியாற்றும் நிறுவன பாஸுக்கு சென்றுவிட்டது. அந்த கடிதத்தை பார்த்த பாஸ் அதனை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி அறிந்து அதிர்ச்சியான அந்த 25 வயது பெண், நடந்த சம்பவத்தை கூறி தன்னை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளும்படி தனியார் நிறுவன பாஸிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால் அந்த தனியார் நிறுவனத்தின் பாஸ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இனி பணியில் சேர்க்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.. இதனால் அந்த பெண் தற்போது புதிய பணியை தேடிவருகிறார். ஆசையாக வளர்த்த பூனைகளை கவனிக்க ராஜினாமா செய்ய முடிவு செய்த இளம்பெண் தான் வளர்க்கும் ஒரு பூனையாலேயே வேலையை இழந்துள்ள சம்பவம் தற்போது இணையதளத்தில் பேசும்பொருளாகி உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications