மூளையில் ஆபரேசன்... ஹாயாக புல்லாங்குழல் வாசித்தபடி படுத்திருந்த நோயாளி!
அமெரிக்காவில் மூளை ஆபரேசன் நடந்த போது புல்லாங்குழல் வாசித்துள்ளார் வயதான பெண் ஒருவர்.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் மூளையில் ஆபரேசன் நடந்தபோது, புல்லாங்குழல் வாசித்து மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் 63 வயது பாட்டி ஒருவர்.
அமெரிக்காவின் டெக்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் அன்னா ஹென்றி ( 63). புல்லாங்குழல் இசைக்கலைஞரான இவருக்கு மூளையில் கட்டி உண்டானது. அன்னாவைச் சோதித்த மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு எனக் கூறிவிட்டனர்.

எனவே, ஹுஸ்டனில் உள்ள ஹெர்மான்-எடக்சாஸ் மெடிகல் சென்டரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போது, படுக்கையில் படுத்தபடி அன்னா புல்லாங்குழல் வாசித்தபடி இருந்தார். இது அங்கிருந்த மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மூளையில் இது போன்ற சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும் போது, நோயாளியை ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்ல இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைப்பது வழக்கம்.
ஆனால், 63 வயதான அன்னா, ஒருபுறம் மருத்துவர்கள் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, தடுமாற்றம் ஏதுமின்றி கைகளில் புல்லாங்குழலை பிடித்து இசைத்தபடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications