கருவை கலைத்து அதை கைவிட்ட காதலனுக்கு பார்சலாக அனுப்பிய இளம்பெண்
பாங்காக்: தாய்லாந்தில் 21 வயது பெண் ஒருவர் 28 வார கருவை கலைத்து அதை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து தன்னை கைவிட்ட காதலனுக்கு பரிசாக அளித்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள சம்ரோங் நுவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேவ்(21). அவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 25 வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். இந்நிலையில் வேவ் கர்ப்பமாகியுள்ளார். காதலி கர்ப்பமானது பற்றி அறிந்த அந்த வாலிபர் வேறு ஒரு பெண்ணிடம் சென்றுவிட்டார்.

இது குறித்து அறிந்த வேவ் அந்த வாலிபரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து வேவ் 28 வார கருவை கலைத்துவிட்டார். கலைத்த கருவை ஒரு துணியில் சுற்றி அட்டைப் பெட்டியில் வைத்து காதலனின் வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
அவர் அந்த பெட்டியை தனது காதலனின் சகோதரியிடம் அளித்து அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து டாக்சியில் கிளம்பிச் சென்றுவிட்டார். பெட்டியை பிரித்துப் பார்த்த காதலன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வேவை தேடி வருகிறார்கள். காதலனின் பொறுப்பில்லாத்தனத்தை அவருக்கு நினைவூட்ட இவ்வாறு செய்ததாக வேவ் கடிதம் ஒன்றை எழுதி அந்த அட்டைப்பெட்டியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications