பெற்ற மகனை கொன்று வீசிய தாய் – 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் பெற்ற மகனையே கொலை செய்த தாய் ஒருவருக்கு 11 ஆண்டுகால சிறைதண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரை சேர்ந்தவர் ரோஸ் தீப் அதியோகா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவருக்கு 3 வயதில் மிகாயில் குலார் என்ற மகன் இருந்து வந்தார்.

கண்மூடித்தனமான உதை:

சம்பவத்தன்று இவர் தனது மகன் மிகாயில் குலாரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்.

40 இடங்களில் காயம்:

அதில் அவனது இடுப்பு, முதுகு, நாடி, முகம், கன்னம், தலை உள்ளிட்ட 40 இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. எனவே, அவன் பரிதாபமாக இறந்தான்.

புதரில் வீசிய தாய்:

அவனது பிணத்தை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்தார். பின்னர் அதை காரில் 20 கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று கிர்க்கால்டி என்ற இடத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டின் பின்புறம் புதரில் வீசினார்.

காணவில்லை என நாடகம்:

தனது மகன் மிகாயில் குலாரை காணவில்லை என நாடகமாடினார். ஆனால் அவனது உடலை கண்டு பிடித்த போலீசார் விசாரணையில் தாயார் ரோஸ்திப் அதியோகா கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.

11 ஆண்டுகள் சிறை:

எனவே, அதியோகாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வார்டு கிளென்னி அவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+