மொத்தமாக உறவை துண்டிப்பேன்.. ஜி ஜிங்பிங் உடன் பேச விருப்பம் இல்லை.. கோபத்தின் உச்சிக்கே போன டிரம்ப்
நியூயார்க்: சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் பேச விருப்பம் இல்லை, என்னால் இப்போது அவருடன் பேச முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகிலேயே அமெரிக்காதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 1,457,593 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 86912 பேர் அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கலாம். சீனா உண்மைகளை மறைத்துவிட்டது என்று அமெரிக்கா கூறுகிறது.

டிரம்ப் பேட்டி
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், சீனாவுடன் மொத்தமாக உறவை துண்டிக்க வேண்டிய நிலை வந்தாலும் வரும். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். மொத்தமாக சீனாவுடன் உறவை துண்டிக்கவும் முடியும். விரைவில் நான் முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பேன். கொரோனா குறித்த உண்மைகளை சீனா மறைத்துவிட்டது. வெளியே சொல்லவில்லை.

சீனாவின் தவறு
சீனா நினைத்து இருந்தால் வெளியே சொல்லி இருக்கலாம். ஜனவரி மாதமே சீனா இதை தடுத்து இருக்கலாம். கொரோனாவை சீனா கையாண்ட விதம் பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இப்போது நான் செய்த வர்த்தக ஒப்பந்தம் வீணாகிவிட்டது. மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ளது. எனக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் பேச விருப்பம் இல்லை.

எங்களுக்கு இடையே உறவு
எங்களுக்கு இடையே நல்ல உறவு இருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது அவருடன் பேச விருப்பம் இல்லை. அவருடன் பேச முடியாது. நான் சீனா மீது அதிருப்தியில் இருக்கிறேன். நாங்கள் சீனாவில் என்ன நடக்கிறது என்று விசாரிக்க முயன்றோம். ஆனால் எங்கள் மருத்துவர்களை, அதிகாரிகளை சீனா உள்ளேயே விடவில்லை. அவர்கள் நாட்டிற்கு உள்ளேயே சீனா விடவில்லை.

நாங்கள் நினைக்கவில்லை
நாங்கள் முதலில் இதை பெரிதாக நினைக்கவில்லை. சீனாவின் உள்நாட்டு விவகாரம். அவர்களுக்கு கொரோனாவை ஒடுக்க தெரியும் என்று நினைத்தோம். ஆனால் சீனா மிக மோசமாக செயல்பட்டுள்ளது. கொரோனா பரவலை அந்த நாடு தடுக்க தவறி விட்டது. நாங்கள் எவ்வளவோ முயன்று பார்த்தோம். ஆனால் சீனா எங்கள் பேச்சை கேட்கவில்லை, என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications