அல் அய்னில் நாளை உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. அனைவரும் வாரீர்!
அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடக்கிறது.
அல் அய்ன் இந்திய சமூக மையம் அல் அய்ன் பகுதியில் வசித்து வரும் இந்தியர்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந் தால் அவர்களது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வது, சொந் த ஊருக்கு அனுப்பி வைப்பது, பாஸ்போர்ட் உள்ளிட்ட தூதரக சேவைகள், ஆலோசனைகள், பணிப்பெண்களது பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது குறித்து அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா கூறியதாவது : அல் அய்ன் இந்திய சமூக நல மைய வளாகத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடக்கிறது.
பொதுமக்கள் மத்தியில் நீரிழிவு தொடர்பான பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக விழிப்புணர்வு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரைகளை அல் வகார் மருத்துவ மையத்தின் டாக்டர் சாகுல் ஹமீது, டாக்டர் ஜேக்கப் தாமஸ் ஆகியோர் வழங்க இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தேசிய அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நான்கு நாட்களுக்குள் கொரோனா பிசிஆர் பரிசோதனை செய்த முடிவுகள் அல் ஹொசன் செயலியில் வைத்திருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications