உலகின் மிகப்பெரிய விமானம் சோதனை ஓட்டத்தின்போது தரையில் விழுந்து விபத்து
லண்டன்: உலகின் மிகப்பெரிய விமானம் இரண்டாவது சோதனை ஓட்டத்தின் போது திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.
இங்கிலாந்தின் ஹை பெர்ட் ஏர் வைக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்லான்டர் -10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய விமானத்தை வடிவமைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விமானத்தை தயாரிக்கும் பணியில் என்ஜினியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மொத்தம் நான்கு என்ஜின்கள் கொண்ட இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது. ஹீலியம் வாயு மூலம் இயங்கக்கூடியது. மற்ற விமானங்கள் எழுப்பும் சத்தத்தை விட மிகவும் குறைவான ஒசை எழுப்பும் திறன் கொண்டது.
இந்த விமானத்தின் சோதனை முதல் சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் இருந்து மீண்டும் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது வானில் உயரே புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.
இது குறுித்து பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், விமானம் தரையில் மோதியதில் அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்னதாக திட்டமிட்டபடி புறப்பட வேண்டிய நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 90 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. எனினும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications